ஒற்றைத் தனிமையின் வெளியில்
தனியாய் திரிந்துகொண்டிருந்தது
பச்சை நிற சர்ப்பம் ஒன்று.
உரித்துப் போன சட்டை ஒன்று
மரப்புல்லில் சல்லாபித்துகொண்டிருக்கிறது
கூடல் முடிந்த பின்
கழற்றிபோட்ட ஆணுறை
போய்வந்த பயணம் பற்றி
சுய சரிதை எழுததொடங்கியுள்ளது
ஆணுறை தப்பிய சுயமைதுன
விந்தொன்று படுக்கையின் மத்தியில்
வீறுகொண்டு எழுந்து வீரியம் காட்டிய படி
பேயாட்டம் ஆடுகிறது
நிசப்தம் நிறைந்த மனதின் வெளியில்
ஒற்றைக்கண் மூடி
தியானம் தொடங்கியாகிவிட்டது
பெண்டாளும் உன் கோர முகம்
அருகில் கண்ட
இரவில்
எதிர் சுவற்று பல்லியோடு
என் கூடல் மிக திருப்தியோடு
உச்ச நிலை நோக்கி
Friday, August 28, 2009
Wednesday, July 1, 2009
என் கனவின் சாம்பல்
என் கனவுகள் அடுக்கிய
சிதையில் உன் கேள்விகள்
தீ வைத்து சென்றன.
ஒரு மதிய வேளையில்
கொளுத்தும் பகலின் உக்கிரத்தில்
எனை எரித்தேன் பதில் இல்லாமல்.
மெல்ல பற்றி எரியத் தொடங்கியது
என் இமையின் மயிர்.
கால் மடக்கி
கைகள் கட்டி மெதுவாய்
சத்தம் எழுப்பாமல் அடங்க ஆரம்பித்தேன்
எரியும் நெருப்பின் தாக்கத்தில்
அறையில் இருந்த நமது
திருமண புகைப்படம் உருகிக் கொண்டிருந்தது.
நேற்றுதான் கொண்டாடி கழட்டி
மாட்டி இருந்த மாலையின் வாசத்தில்
நெருப்பின் மணம் தனியே
அலைந்து தனித்திருந்தது.
என் கனவுகளின் நிறம் சற்றே
மங்க தொடங்கியது
உன் கனவுகளின் வெளிச்சத்தில்
கைக்குள் அடங்கிய என்
கனவுகளின் சாம்பல்
காற்றில் எங்கும் பறக்கத்தொடங்கியது
என்றாவது ஒரு நாள்
உன் காலடியில் மெத்தை விரிக்கும்
என் ஆசைகளின் படிமானம்.
Thursday, June 4, 2009
மழை நிறம்
நேற்றுதான் அந்த ஓவியம்
வரையத்தொடங்கினேன் இரவின் ஒளியில்
ஒவ்வொரு கோட்டின் முடிவிலும்
ஏதோ ஒரு கேள்வி
எனைப் பார்த்து கண் குத்தி நின்றது
ஒரு மாலை நேரத்து
உயிரின் உள் நனைத்த
ஒரு சாரலை கோட்டில் வரைந்துவிட நினைத்தேன்
மழையின் வண்ணம் வரைய
என்னுள் மிச்சமிருந்த
கடைசி சந்தோஷம் வழித்தெடுத்தேன்
தொடங்கிய நிமிடம் முதல்
என் விரல் வழியே
உதிரத்தொடங்கிய என் குருதி
இந்த நிமிடம் வரை தொடர்கிறது
இறுதியில் என் மழையின் நிறம்
சிவப்பாகிப்போனது
எனது விரல் அறியாமலே.....
வரையத்தொடங்கினேன் இரவின் ஒளியில்
ஒவ்வொரு கோட்டின் முடிவிலும்
ஏதோ ஒரு கேள்வி
எனைப் பார்த்து கண் குத்தி நின்றது
ஒரு மாலை நேரத்து
உயிரின் உள் நனைத்த
ஒரு சாரலை கோட்டில் வரைந்துவிட நினைத்தேன்
மழையின் வண்ணம் வரைய
என்னுள் மிச்சமிருந்த
கடைசி சந்தோஷம் வழித்தெடுத்தேன்
தொடங்கிய நிமிடம் முதல்
என் விரல் வழியே
உதிரத்தொடங்கிய என் குருதி
இந்த நிமிடம் வரை தொடர்கிறது
இறுதியில் என் மழையின் நிறம்
சிவப்பாகிப்போனது
எனது விரல் அறியாமலே.....
Wednesday, April 29, 2009
காலங்கள் கடந்த பின் வரும்
ஒவ்வொரு அழைப்பிலும்
குத்தும் வலியாலான கரம் நீள்கிறது.
அதன் காரணம் புரியாத
மூளை அடுக்குகள் தனியே அலைகின்றன.
கரம் பற்றி நடந்த நாட்கள்
விரல் வழியே வழிகின்றது.
எண்கள் சில நேரங்களில்
எண்ணங்களின் கலவரத்துக்கு
காரணமாய் ஆகிவிடுகின்றன.
எண்ணங்களின் பின்னே போகும்
வாழ்வின் பதில்கள்
கேள்வி தேடி தன் போக்கில்
கட்டிலோடு கரைந்த உறவுகள்
தன் விதை தேடி புதிதாய்
உறவுப்பாலம் அமைக்க முன் நிற்கின்றன
முடிவு தேடித்தானே பயணம்
பின் எதற்கு கவிதையின் முடிவு
ஒவ்வொரு அழைப்பிலும்
குத்தும் வலியாலான கரம் நீள்கிறது.
அதன் காரணம் புரியாத
மூளை அடுக்குகள் தனியே அலைகின்றன.
கரம் பற்றி நடந்த நாட்கள்
விரல் வழியே வழிகின்றது.
எண்கள் சில நேரங்களில்
எண்ணங்களின் கலவரத்துக்கு
காரணமாய் ஆகிவிடுகின்றன.
எண்ணங்களின் பின்னே போகும்
வாழ்வின் பதில்கள்
கேள்வி தேடி தன் போக்கில்
கட்டிலோடு கரைந்த உறவுகள்
தன் விதை தேடி புதிதாய்
உறவுப்பாலம் அமைக்க முன் நிற்கின்றன
முடிவு தேடித்தானே பயணம்
பின் எதற்கு கவிதையின் முடிவு
Thursday, October 9, 2008
மிச்ச சிலிர்ப்பு
எழுதப்படும் எல்லா வார்த்தைகளும்
பகிர்ந்து கொள்ளப்படுவதில்லை எல்லோருடனும்
சில அனைவருக்காக
சில சிலருக்காக
பல எனக்காக
மிகப்பல உனக்காக
மனதுள் மட்டுமே உறவாடி
விளையாடிய பல கவிதைகள்
மனதோடு தேங்கிவழிந்து கொண்டிருந்த
பல வார்த்தைகள்
இன்று
தோளில் இருந்து நழுவி
இடை விட்டு இறங்கிவிரல் பிடித்து
நடந்து படி ஏறி
உன் வீட்டுக்கதவு தட்டத்தொடங்கி விட்டது
ஒவ்வொரு நாளும் கதவு
திறக்கப்படும் நேரத்துக்காக
திறக்கப்படும் கதவின் பின்னால்
நிற்கும் ஒற்றை ஜோடி
கால்களுக்காக
ஒற்றைக்காலில் என் கவிதை செய்த
தவத்தின் பலனாக
உனக்குள் எனது நினைவிருக்குமா
தெரியவில்லை
நினைவுகளின் மீட்டெழுப்புகளின்
பொழுதுகளில்
கடந்த காலங்களின் காயங்கள்
நிச்சயம் தொடரும்
தழும்புகளின் ஈரப்பிசுபிசுப்பு
இன்னும் கைகளில்
காயாமல்
காயத்தின் ஒவ்வொரு கீறலிலும்
நம்மின் முதல் முத்தத்தின்
சுவடுகள்
என்னுள் மின்சாரம் பாய்ச்சிய
காற்றுடன் கூடிய
உதடுகளின் அணைப்பு
இன்றும் மிச்சமாய்
எனக்குள் சிலிர்க்கும்
மிருகமாய்...
பகிர்ந்து கொள்ளப்படுவதில்லை எல்லோருடனும்
சில அனைவருக்காக
சில சிலருக்காக
பல எனக்காக
மிகப்பல உனக்காக
மனதுள் மட்டுமே உறவாடி
விளையாடிய பல கவிதைகள்
மனதோடு தேங்கிவழிந்து கொண்டிருந்த
பல வார்த்தைகள்
இன்று
தோளில் இருந்து நழுவி
இடை விட்டு இறங்கிவிரல் பிடித்து
நடந்து படி ஏறி
உன் வீட்டுக்கதவு தட்டத்தொடங்கி விட்டது
ஒவ்வொரு நாளும் கதவு
திறக்கப்படும் நேரத்துக்காக
திறக்கப்படும் கதவின் பின்னால்
நிற்கும் ஒற்றை ஜோடி
கால்களுக்காக
ஒற்றைக்காலில் என் கவிதை செய்த
தவத்தின் பலனாக
உனக்குள் எனது நினைவிருக்குமா
தெரியவில்லை
நினைவுகளின் மீட்டெழுப்புகளின்
பொழுதுகளில்
கடந்த காலங்களின் காயங்கள்
நிச்சயம் தொடரும்
தழும்புகளின் ஈரப்பிசுபிசுப்பு
இன்னும் கைகளில்
காயாமல்
காயத்தின் ஒவ்வொரு கீறலிலும்
நம்மின் முதல் முத்தத்தின்
சுவடுகள்
என்னுள் மின்சாரம் பாய்ச்சிய
காற்றுடன் கூடிய
உதடுகளின் அணைப்பு
இன்றும் மிச்சமாய்
எனக்குள் சிலிர்க்கும்
மிருகமாய்...
மழையின் நட்பில்
ரோஜாக்கள் பூக்கும் மழைக் காலத்தில்
இருவரும் தனித்திருந்து
பனித்துளி ரசிப்போம்
எனக்கான துளியை நீயும்
உனக்கான துளியை நானும்
முட்களை தாண்டி
இதழ்களை தீண்டும் நாட்கள்
மெல்ல பனியில் மறையும்
இரவில் பெய்த பனித்துளிகள்
மெல்ல காலம் எனும்
கோடையில் காயும்..
கலைந்த எழுத்துகளில் கவிதைகள்
நிலை மாறுகின்றன..
பிரிவின் காயத்தை
காலம் மெல்லத் தின்னும்
மறுபடியும் மேகம் குவியும்
மற்றொரு மழைக் காலத்துக்காக
அந்நாளுக்காக
கையில் குடை பிடித்துக்
காத்திருப்போம் மீண்டும் நனைய
சாயம் போன கவிதைவரிகள்
மறுபடியும் காத்திருக்கும்..
மழை கொண்டுவரும் புதிய நிறத்துக்காக..
நிச்சயம் மழை வரும் நண்பனே
புதிய நிறத்துடன்
புதிய மணத்துடன்
மிக திடமாக
கைகோர்த்து நடப்போம் நட்புடன் கம்பீரமாக
மழை கழுவிய சாலையில்
கைகோர்த்து நடப்போம் நட்புடன் கம்பீரமாக
எல்லா கோடையின்
இறுதியும் ஒரு மழையுடனே முடிகிறது..
எல்லாக் கோடையும் ஒரு மழைக்காக காத்திருக்கிறது.
நமைப் போலவே
இருவரும் தனித்திருந்து
பனித்துளி ரசிப்போம்
எனக்கான துளியை நீயும்
உனக்கான துளியை நானும்
முட்களை தாண்டி
இதழ்களை தீண்டும் நாட்கள்
மெல்ல பனியில் மறையும்
இரவில் பெய்த பனித்துளிகள்
மெல்ல காலம் எனும்
கோடையில் காயும்..
கலைந்த எழுத்துகளில் கவிதைகள்
நிலை மாறுகின்றன..
பிரிவின் காயத்தை
காலம் மெல்லத் தின்னும்
மறுபடியும் மேகம் குவியும்
மற்றொரு மழைக் காலத்துக்காக
அந்நாளுக்காக
கையில் குடை பிடித்துக்
காத்திருப்போம் மீண்டும் நனைய
சாயம் போன கவிதைவரிகள்
மறுபடியும் காத்திருக்கும்..
மழை கொண்டுவரும் புதிய நிறத்துக்காக..
நிச்சயம் மழை வரும் நண்பனே
புதிய நிறத்துடன்
புதிய மணத்துடன்
மிக திடமாக
கைகோர்த்து நடப்போம் நட்புடன் கம்பீரமாக
மழை கழுவிய சாலையில்
கைகோர்த்து நடப்போம் நட்புடன் கம்பீரமாக
எல்லா கோடையின்
இறுதியும் ஒரு மழையுடனே முடிகிறது..
எல்லாக் கோடையும் ஒரு மழைக்காக காத்திருக்கிறது.
நமைப் போலவே
Wednesday, August 20, 2008
சுவற்றுச் சித்திரம்
சுவரில் இருந்த கோட்டுச்சித்திரமொன்று
நேற்றைய பின்னிரவில்
தரையிறங்கி வந்திருந்தது.
முகம் மூடிய போர்வை தாண்டி
காதோரமாய் அதன் மூச்சுக்காற்று
எனை எழுப்பியது.
இரவின் கருமையில்
பளபளத்த கண்கள்
அது கடந்து வந்த
பாதையின் வெளிச்சப்புள்ளிகளை
தொட்டுணர்த்தியது.
இருவரும் மெல்ல கைகோர்த்து
கவிதை வாசிக்கத் துவங்கினோம்
வெளியில் பெய்து கொண்டிருந்த
சாரலில்
மடி சாய்ந்து உறங்க வேண்டுமாய்
கண் பார்த்து கேட்டது அச்சித்திரம்.
முகம் நனைய நானும்
தன் கோடுகள் மறைய சித்திரமும்
உறங்கத் துவங்கினோம்
உறக்கத்தின் முடிவில்
கனவு கலைந்து எழுந்து பார்த்தேன்
சித்திரத்தை சுவற்றில் காணவில்லை.
நேற்றைய பின்னிரவில்
தரையிறங்கி வந்திருந்தது.
முகம் மூடிய போர்வை தாண்டி
காதோரமாய் அதன் மூச்சுக்காற்று
எனை எழுப்பியது.
இரவின் கருமையில்
பளபளத்த கண்கள்
அது கடந்து வந்த
பாதையின் வெளிச்சப்புள்ளிகளை
தொட்டுணர்த்தியது.
இருவரும் மெல்ல கைகோர்த்து
கவிதை வாசிக்கத் துவங்கினோம்
வெளியில் பெய்து கொண்டிருந்த
சாரலில்
மடி சாய்ந்து உறங்க வேண்டுமாய்
கண் பார்த்து கேட்டது அச்சித்திரம்.
முகம் நனைய நானும்
தன் கோடுகள் மறைய சித்திரமும்
உறங்கத் துவங்கினோம்
உறக்கத்தின் முடிவில்
கனவு கலைந்து எழுந்து பார்த்தேன்
சித்திரத்தை சுவற்றில் காணவில்லை.
Subscribe to:
Posts (Atom)