Tuesday, December 4, 2007

உண்மை முகம்

உடலில் ஒட்டிய
காதல் பச்சோந்தியை
கிழித்துப் பார்த்தேன்
காமப் பிசாசு
பல்லிளித்தது.

Friday, November 23, 2007

ஓட்டம்

தனிவழிப் பயணம்
சில்வண்டின் துரத்தல்
நீளும் கைகளை
எட்டிவிட ஓட்டம்
விழிக்கும் வரை....

Wednesday, November 21, 2007

சிணுங்கல்

கடக்கும் ஒவ்வொரு
குழந்தையின் சிணுங்கலும்
தொடர்ந்து கொண்டே இருக்கிறது..
கருவோடு கலைந்த
சிசுவின் நினைவுகளை....

கண்கள்

கனவுகள் மிதக்கும்

கண்களுடன் எனை

பார்க்கிறது

என் கழுத்தில்

சுற்றிய சர்ப்பம்

எனைத் தாண்டி

வெற்றுப் பயணத்தின்
வெள்ளைச் சாலையில்
எனக்கு முன்
வேகமாய்
என் சாம்பல் குதிரை
எனை மிதித்தபடி

நீளும் பாதை

இருளின் நீள் பாதையில்
நடக்கிறேன்
எதிர்ப்படும் ஒவ்வொரு முகத்தையும்
உற்று நோக்கியவாறு
மார்பில் அழுந்திய
என் கறுப்பு பூனையோடு

Tuesday, November 20, 2007

சாட்சி

வழிந்து ஓடிய
என் காமத்தின்
கடைசி துளியில்
காத்திருந்தது
நம் காதல்
மெளன சாட்சியாய்.....

கல்லறை காமம்

அறை முழுதும் காதல்
படுக்கை கசங்கலில் வழிந்த காமம்
இறுக தழுவிய உடல்களின் நடுவே ஒளிந்த நட்பு
நீல வியர்வையின் வேட்கை
அனைத்தும் கல்லறையில் தஞசம் புகுந்தது
என் இறுதி கேள்விக்கு எஞ்சிய
உன் மெளனத்தில்

என் பறவை

எந்த நிமிடமும் அது நடந்துவிடலாம்
நம்மை கடந்து விடலாம்
நம்மில் கலந்து விடலாம்
அந்த நிமிடம் தேடி
காற்றில் அலைகிறது
என் ஒற்றை சிறகு பறவை