நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது
கவிதைப் பிரசவங்கள்
சில சுகமாய் சில குறையாய்
ரத்தம் காணா சிசு வெளியே வருவதில்லை
எத்துணை காலமாயினும்
உலகம் காணும் வேகம் இருப்பினும்
சில சமயம் உள்நின்று செல்லமாய்
இரட்டைப் பிரசவத்துக்காய்
அடம் பிடிப்பவை சில
வெளியில் எடுத்து
தலை கவிழ்த்து முதுகு தட்டியபின்
கண் சொருகி
மரித்தவை சில
உயிரற்று ஜடமாய்
மெல்ல சுவாசித்து
தாதியின் கைசூட்டில்
தன் உயிர்சூட்சுமம் தேடி
வெளிவந்தவை சில
புதிதாய் முளைத்த
சின்னஞ்சிறு கை கால்களுடன்
பனிக்குட நீரில் மிதந்தபடி
தன் நேரத்துக்காய்
காத்திருப்பவை சில
எனினும் நித்தமும்
நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது
கவிதைப் பிரசவங்கள்
Thursday, January 24, 2008
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
arumai.
intha pirasavathirkkaana kaaranam kaNNil padum ethuvaagavum irukkalaam enpathee ithil ethirmaRaiyaana seithi!
kandippaga... intha prasavathin kalavi ella nodiyilum nadanthukondu irukkirathu...
nandri goutham
nalla eruku!!! u r rocking :-),
all the very best..
//kandippaga... intha prasavathin kalavi ella nodiyilum nadanthukondu irukkirathu...//
sariyaana paarvai.
kavithaiyai kaathalippavargal.. kaanum porulaiyellaam kaathalippavargalaakaththaan iruppaargal...
ungal entha kavithai unmaiyana aarokkiyamaana sugaprasavam :-)
Good Great
Post a Comment