சபிக்கப்பட்ட பழங்களின் மர நிழலில்
கால் நீட்டி அமர்ந்திருந்தோம்
ஒருவரையொருவர் அணைத்தபடி
வெற்று உடலாய்
மௌனமாய்
நமைப் பற்றி ஏதும் அறியாமல்
எந்த கேள்வியும் எழாமல்
தூர நின்று பார்த்த ஆதாம்
வேகமாய் அருகில் வந்தான்..
தன் ஆண்மையை நம்முள் பதிவு செய்வதற்காய்
அவன் குறி
நேற்றுப் பிறந்ததைப் போல சுருங்கிப் போனது
நம்மின் வெப்ப மூச்சில்....
Wednesday, January 2, 2008
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
nicely expressed the reason for lesbianism.
ஒரு வித்தியாசமான சிந்தனையிது
அருணாவின் பின்னூட்டத்தின்
ஒற்றை வரியால்
அணைத்து முத்தமிடுகிறதே!
இதுவரை வாசித்ததில் உங்களுடைய கவிமனசின் சமரசம் செய்யாத மிகச் சிறந்த படைப்பு இதுதான். பெண்ணின் கவிதை மொழி தன் பணியாத கிளற்ச்சியோடும் அழகோடும் முழையடகிறது. எல்லா தெரிவுமக்குமான பெண்ணின் சுதந்திரத்தில் சமரசம் என்கிற கேழ்வியில்லை. நல் வாழ்த்துக்கள் அனுராதா
Post a Comment