Tuesday, January 8, 2008

தனிமை விருந்தாளி

என் முன் விழும்
நிழல் துரத்தி வேகமாய் ஓடினேன்
உயிர்ப்பையில் காற்று தேக்கி
நிமிர்ந்து பார்த்தேன்
நிழலைக் காணவில்லை...

வென்ற களிப்புடன் பின் திரும்ப
எனைத் துரத்தும் மிருகம்
தரையில் நெளியும்.

வீடு வந்து சேர்ந்தேன்
உடலில் மேய்ந்த புழுக்களை உதறி..

எனக்கும் முன்
என் தனிமை விருந்தாளி
தலைவாழை இலை விரித்து
உணவாய் எனை உண்டபடி

எனை நோக்கி தன்
கோரப்பல் நீட்டும்.

3 comments:

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

all ur verses pick-up me to an imaginary world "utopia"... here no men except me! I feel as i am disturbing others... means girls.

N Suresh said...

உங்களின் கவிதைக்கும்
எனது புரிதலுக்குமிடையில்
மகிழ்கிறதென் ரசனை!

வாழ்த்துக்கள்

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

இன்றுதான் மொத்த கவிதைகளையும் படித்து ரசித்தேன்... நான் படித்த கவிதைகளில் உங்களுடைய கவிதை முற்றிலும் மாறுபட்ட படைப்பாக இருக்கிறது... மனதில்பட்டதை வெளிப்படையாக சொல்வது கவிக்னர்களின் சிறப்பு, அதனை நயமாக சொல்வதே கவிதைக்கு சிறப்பு!..

உங்கள் கவிதைகளில் கருத்தும், எழுத்து நடையும் நன்ராக வந்துள்ளது. இன்னும் நிறைய எழுதுங்கள்...

உலகம் பெரியது... நம் எண்ணங்கள் அதனினும் பெரிது!!