உன் வீழ்ச்சியை என் முதுகில் ஏற்றி
சிலுவைக் கூடு சுமந்து பயணிக்கிறேன்
மெல்ல நகரும் நத்தையாய்
என் ஓடுடைக்கும்
கரம் தேடி
பாலைவன மணலின் சூட்டில்...
ஏந்தும் கரம் தோறும்
இது இறுதி எனும்
நம்பிக்கை கதகதப்பின் சுகம்
எனினும் பயணம் தொடர்கிறது
நெடுந்தொலைவு சூரியன்
உதிக்கும் திசை தேடி...
Thursday, January 3, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
The snail should remove its load and must go to a safe permanent hand.
கவிதை இன்னமும் கொஞ்சம் கூட வாசகனின் புரிதலிக்கு சென்றால் நன்று
Post a Comment