ஒவ்வொரு நாளும் கேள்விகள்
நமைத் துரத்தும்
ஒரு கருப்பு நாளில்
தலை மேல் இறங்கும்
எங்கிருந்தோ கவ்விய
ஒற்றை மாமிசத்துண்டு ஒன்றை
அன்றுதான் அணிந்திருந்த
புதுச் சட்டையின் மேல்
அபிஷேகம் செய்யும்
ஒதுங்க இடமில்லா சாலையின்
நடுவில் போகையில்
நம் மேல் சேறடித்துப் போகும்
சில கேள்விகள்
தனிமையில் அமர்ந்திருக்கும்போது
காதோரம் ரீங்காரமிடும்
எங்கிருந்தோ பறந்து வரும்
கேள்விகள்
எடுத்துக் கொஞ்ச
எச்சில் உமிழ்ந்துவிட்டு போகும்
சில கேள்விகள்
கலவியின் உச்சத்தில்
என்றோ பேருந்துப் பயணத்தில்
பார்த்துப் பெருமூச்சு விட்டவனின்
முகம் வந்து மறையும்
சில முகங்கள் கேள்வியை மட்டுமே
நினைவில் நிறுத்தும்
எத்தனை சிரமப்பட்டாலும்
உதறி எழுந்து போய்விட முடியா
உறவுகளின் இறுக்கத்தின்
முடிவில் எஞ்சிருப்பது
கேள்விகளே
Saturday, October 31, 2009
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
/ கலவியின் உச்சத்தில்
என்றோ பேருந்துப் பயணத்தில்
பார்த்துப் பெருமூச்சு விட்டவனின்
முகம் வந்து மறையும்//
நிதர்சனம்.
//கலவியின் உச்சத்தில்
என்றோ பேருந்துப் பயணத்தில்
பார்த்துப் பெருமூச்சு விட்டவனின்
முகம் வந்து மறையும்//
அப்பாடி என்ன ஒரு வரி !!!!!
தொப்பியில் மேலும் ஒரு சிறகு
Nandri Sankar, Nesamithran.
கலவியின் உச்சத்தில்
என்றோ பேருந்துப் பயணத்தில்
பார்த்துப் பெருமூச்சு விட்டவனின்
முகம் வந்து மறையும்
சில முகங்கள் கேள்வியை மட்டுமே
நினைவில் நிறுத்தும்
எத்தனை சிரமப்பட்டாலும்
உதறி எழுந்து போய்விட முடியா
உறவுகளின் இறுக்கத்தின்
முடிவில் எஞ்சிருப்பது"
அனு, உங்களுடைய இடம் இதுவல்ல, இன்னும் தொடர்ந்து எழுதுங்கள், உங்கள் எழுத்தே உங்களை அங்கு கொண்டுபோய் சேர்க்கும். வாழ்த்துக்கள்.
Post a Comment