Tuesday, November 3, 2009

உறவாக

மிக நீண்ட நாட்களாய்
மங்கியதாய் ஒரு நினைவு என்னுள்
தங்கியுள்ளது

வாகனங்களற்ற ஒரு சாலையில்
மெல்லிய நீரோடையின்
சாரல் சத்தத்தோடு
உன் விரல் பிடித்து
தொலை தூரம் நடப்பதாய்.

எப்போது இந்த நினைவு
என்னுள் பதிந்தது எனக்கு
இந்த நிமிடம் வரையில்
தெளிவாகவில்லை

ஆனால் உண்மையில்
நான் யார் என்பதோ
என் உணர்வு உன்னைச் சுற்றிப்
பின்னப்பட்டது என்பதோ
உனக்கு தெரியாது

உன் பாதம் பின் பற்றி
என் சின்னஞ்சிறு பாதம்
எடுத்து வைத்து நடக்க
ஆசைப்பட்டிருக்கிறேன்

வாய்த்தது என்னவோ ஊமைக் காயங்கள்
மட்டும்தான்

உனக்கு வழி காட்ட
என்னால் இயலாது என்ற
ஒரு வார்த்தையில் வெகு தூரம்
விலகி நின்று கொண்டாய்

உன்னால் மட்டுமே நான்
வழி நடத்திச் செல்ல
கனவு கண்டது
 உன்னால்
உணர முடியாமல் போய்விட்டது
வசதியாக

உனக்கான எல்லையில்லா
வானம் விரித்து வைத்துக் காத்திருந்தேன்
ஆனால் உன் சிறகுகளை
நீயே வெட்டிக்கொண்டாய்
சூழ்நிலைக் கைதி
என்ற பெயர் சூட்டிக்கொண்டு

என்றாவது வெளிவருவாயா
எனக்கும் உறவாக?

6 comments:

கலகலப்ரியா said...

nice nga..! :-)

ராஜ சேகர் said...

இது பல குழந்தைகளின் இன்றைய நிலை..!

அன்பேசிவம் said...

தோழி, //மெல்லிய நீரோடையின்
சாரல் சத்தத்தோடு//
மெல்லிய நீரோடையில் என்று வந்திருக்க வேண்டுமென்று தோன்றுகிறது.நீரோடையின் என்று எழுத வேறுஏதும் காரணமுண்டா?

கவிதை அருமை, உண்மையில் தனிமையின் சுகம், சோக நினைவுகளே!...
வாழ்த்துகள்.

அன்பேசிவம் said...

வாழ்த்துகள் அனு, நிச்சயம் உங்கள் கவிதைகள் உங்களுக்கு உரிய இடத்தை பெற்றுதருமென்பதில் எனக்கு உங்களை விட நம்பிக்கை அதிகம்.
வாழ்த்துகள், தொடர்ந்து எழுதுங்கள்.
:-)

தோழி said...

Thanks Priya, Natpuuu, Murali.

Trails of a Traveler said...

Is this only for the kids. It goes try for everyone!