Saturday, November 21, 2009

மரணக்கோப்பை

















தளும்பிக்கொண்டே இருக்கிறது
மழையினுள் நீட்டப்பட்ட
எனது கோப்பை

அதனுள் இருந்த கடைசிச் சொட்டு
விஷமும் இப்போதுதான்
உள்ளிறங்கத் தொடங்கியது

நாக்கின் நிறம் சற்றே மாறி வருகிறது
சிவப்பாய்
வெளிர் சிவப்பாய்
வெண்மையாய்
மங்கிப் போன நிறமாய்

அதன் தன்மையும் அதனூடே
மாறுகிறது
இறுகிப் போய் விட்டதாய் உணர்கிறது
மூளை

பூசப்பட்ட நகச் சாயம் தாண்டி
விரல் நகங்கள் உயிர் இழக்கின்றன

தொண்டையில் பரவும்
தீ சிறிது சிறிதாக
பாதை தெரிந்து பயணிக்கத்
தொடங்குகிறது

என்றோ சுவைத்த
ஐஸ் கிரீம் இதைபோலத்தான்
இருந்ததாய் ஒரு நினைவு

ஒவ்வொரு வயதின் ஞாபகங்களும்
ஒவ்வொரு துளி விஷத்தை
கொண்டாடுகிறது

எனக்கு எப்போதுமே மரணத்தின்
மீதான காதல் சலித்ததில்லை

மரணத்தின் சுவை உணர
எனது கோப்பை ஏந்தி நிற்கையில்தான்
காமத்தின் முதல் கட்ட ஆர்வம் உணர்ந்தேன்

இதோ இந்த நிமிடம்
புணர்தலின் உச்சத்தில்
இயங்கிக் கொண்டிருக்கிறேன்
விரல்கள் தானாய் நகர்கின்றன

இந்த நிமிடத்தையும் கடந்து
பார்வை மங்கி விடக்கூடாது என்ற
பரிதவிப்போடு

11 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

யப்பா புதுசா வர்றவங்க எல்லாம் பட்டைய கிளப்புறாங்களே நம்மளையும் கிளப்பிடுவாங்களோ!!! அவ்வ்வ்..

கவிதை பிரமாதம் ஒவ்வொரு வரியும் உடம்பின் ஒரு நரம்பினூடாக பயனிக்கிறது..பெஸ்ட் ஆஃப் லக்..கீப் இட் அப்...

தோழி said...

Nandri Vasanth.

லெமூரியன்... said...

அருமையாய் இருக்கு...! முழு மனதாய் பின்னூட்டம் இடவில்லை என்றே நினைக்கிறேன்.....நான் இந்தக் கவிதை வழி பயணித்ததைப் போல பயணித்த யாரவது வெளிப் படையான பின்னூட்டம் இடும்போதே என் எண்ணங்களில் உள்ள கூருரங்களின் அளவிடுகளை அறிய முடியும்.

நிற்க.

\\இந்த நிமிடத்தையும் கடந்து
பார்வை மங்கி விடக்கூடாது என்ற
பரிதவிப்போடு...//

மரணத்தோட வீரியமே அந்தத் தவிப்புதான்..!

பா.ராஜாராம் said...

அருமையாய் இருக்குங்க.

தோழி said...

Thanks Lemoorian.

Thanks Rajaram

Saminathan said...

அருமை

நேசமித்ரன் said...

புணர்தலின் உச்சத்தில்
இயங்கிக் கொண்டிருக்கிறேன்
விரல்கள் தானாய் நகர்கின்றன

அனு ....

கலக்குரீங்க போங்க !
தைரியம் தான் கவிதைகளோட அழகே

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப நல்லா இருக்குங்க

தோழி said...

Nandri Nesamithran :-) Ellam unga aasirvaatham

Nandri Navaasudeen

அன்பேசிவம் said...

என்னங்க அனு இது? விஷம் இறங்குவைதையும் ஐஸ்க்ரீம் இறங்குவதையும் ஒப்பிட்டு .... என்னமோ போங்க.. எப்படி யோசிக்கிறிங்க...

\\இந்த நிமிடத்தையும் கடந்து
பார்வை மங்கி விடக்கூடாது என்ற
பரிதவிப்போடு...//

எனக்கு இதில் உடன்பாடில்லை. தேவைப்பட்டால் இதுபற்றி விவாதிக்கலாம்

sathishsangkavi.blogspot.com said...

//எனக்கு எப்போதுமே மரணத்தின்
மீதான காதல் சலித்ததில்லை//

கலக்கீட்டிங்க......

கவிதை பிரமாதம்.....

ரொம்ப நல்லா இருக்கு.....