துரோகத்தின் நிறம்
இதுவரை புரிபடவில்லை எனக்கு
சமீபத்தில் எனைச் சுற்றி
கருப்பாய் ஒரு மேக மூட்டம்
கவிழத் தொடங்கியது
மேகத் திரை விலக்கி
எட்டிப் பார்த்தேன்
பார்க்கும் இடமெல்லாம்
ரத்த முட்கள்
வேலியாய்
என்றோ சிந்திப் போன
மழைத் துளி ஒன்று
இன்று என் மேல்
அமிலமாய்
என் சதை தின்ற படி
விடியலின் ஆரம்பத்தில்
என் உடல் எங்கும் கவியும்
நீல வெளி
தன் முகம் மறைத்த
துரோகம் கண் விழித்து
என் அருகே
படுத்து உறங்கத் தொடங்கியது
இன்று அதிகாலை
நம்பிக்கை பொய்த்துப் போன
நீள் பயணத்தின் முடிவில்
உயிர் அறுக்கின்றன
சில உறவுகள்
வார்த்தைகள் இரட்டைப் பிரசவ
வலியோடு வெளிவருகின்றன
நம்பிக்கை வெறும்
எழுத்தோடு நின்று விடுகின்றது
மேல் நோக்கி வளரும்
ஒவ்வொரு துளிரும்
மரித்த சிசுவின் வாசம் சுமக்கிறது
Thursday, November 5, 2009
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
konjam kuzhappa irukku.?
அனு எனக்கும் பிடிபடவில்லை, விளக்க முடியுமா? இங்க இல்லாட்டி மெயிலில்...
யாரின் மீது கண்டீரோ இந்நிறத்தை?
Post a Comment