பல இரவுகளின் தேடல்
பெரும்பாலும் விடியலில் முடிந்துவிடுகிறது
எந்தத் தேடலும் இல்லாமல்
மறைந்து போன
ஒரு பெண்மையின் மெல்லிசை
என் போர்வைக்குள் மறைந்துள்ளது
ஒவ்வொரு இரவும்
வெந்து தணியும்
அடுக்களையின் சூட்டில்
அனைத்தையுமா அவித்து விட முடிகிறது
பரிமாறுதல் இல்லாப் பண்டமாய்
வெற்றுப் பிண்டமாய்
ஒவ்வொரு நாளும் சுவை
சேர்த்து வைத்துக் காத்திருக்கிறேன்
தவறும் ஒவ்வொரு நொடியும்
தவிப்பின் பேரமைதி யுகங்கள்
காத்திருத்தல்
பெருவெளியின் ஓரத்தில்
நிசப்தமாய் கண் சிமிட்டுகிறது
பதிந்து மறைந்து போன
நகக் குறிகள்
எதிரில் நின்று
நடந்து போன நிமிடங்களின்
பெயர்க்காரணம் சொல்கிறது
வழியும் உதட்டு ரத்தம்
நுனி நாக்கால் தடவிப் பார்க்க
உன் உயிரணுவின்
சுவையாய் உள் இறங்குகிறது
விரலழுத்தம் தாளா உடைகள்
தன்னால் வழிந்தோடி விடுகின்றன
கால்களின் நடுவே
கிழிக்கப்பட்ட தலையணைகள்
வாய் விட்டுச் சிரிக்கின்றன
மறுபடியும் விடிந்துவிடுகிறது
ஒவ்வொரு இரவும்
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2154
Wednesday, October 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
:)
பெண்மையின் உணர்வுகள் மிக நுட்பமான மொழியில் பதிவு செய்யப் பெற்றிருக்கிறது
நண்பரே இந்தக் கவிதையில்
ம்ம்...
I can feel those lines :(
உங்கள் கவிதைகளில் ஒரு தேடலும், ஆழ்ந்த உணர்வு வெளிப்பாடுகளும் இருக்கிறது..
Post a Comment