Friday, October 23, 2009

போய் வா நண்பனே




போய் வா நண்பனே
எந்த உறவுகளும் நிரந்தரமில்லை
கடந்து போகும் ஒவ்வொரு நிழலின்
வண்ணத்திலும் பல நினைவுகள்
சுமந்து போய் வா



வார்த்தைகள் மட்டும்
வாழ்க்கை ஆகிவிடுவதில்லை



என‌க்கு முன் ந‌ட‌ந்து போகும்
உன் கால‌டிக‌ள் ஒவ்வொரு நாளும்
ஆழ‌ப்ப‌திந்துபோன‌ ப‌ய‌ண‌ங்க‌ள்
உள்ளில் நிலைத்திருக்கும்


போக‌வேண்டிய‌ தூர‌ம் ம‌ட்டும்
மிச்ச‌மாய் பாதை பார்த்தபடி
ஒவ்வொரு மைல்க‌ல்லின்
முடிவிலும் ஏதோ ஒரு
ம‌ன‌தின் காய‌ம்


வெட்ட‌ப்ப‌ட்ட‌ பாறையின் இடையே
வ‌ழியும் ந‌ம்மின் க‌டைசி நிமிட‌ங்க‌ள்



இருட்டு வேர்வையில்
ம‌டிந்த‌ உத‌டுக‌ளின் இர‌த்த‌தில்
முடிந்து போன‌ க‌ண‌ங்க‌ள்



எனினும் க‌ட‌ப்போம்
போய் வா ந‌ண்ப‌னே
வ‌லிக்க‌ வ‌லிக்க‌ பிரிவின்
இன்ப‌ம் தாங்குவோம்

http://www.thinnai.com/?module=displaystory&story_id=30803202&edition_id=20080320&format=html

4 comments:

நேசமித்ரன் said...

மெல்லிய வாக்கியங்கள் சுமக்கும் கண்ணீரின் உப்பு எறும்பு சாரை என ....

அன்பேசிவம் said...

நன்று தோழி

Mohan R said...

Almost I am in a similar situation rite now...

எனினும் க‌ட‌ப்போம்
போய் வா ந‌ண்ப‌னே
வ‌லிக்க‌ வ‌லிக்க‌ பிரிவின்
இன்ப‌ம் தாங்குவோம்

:( :'(

ramesh sadasivam said...

பிரிவின் வலியிலும் ஒரு சுகம் உள்ளதை கடைசி வரியில் அழகாக பதிவு செய்திருக்கிறீர்கள்.