நேற்றுதான் முதல் முறையாக
ஒரு அழைப்பு மணியை வாங்கி வந்தேன்
என் வீட்டில் மாட்டி வைக்க
ஒரு அழகிய கிளியும்
இரு மணிகளும்
ஒன்றுடன் ஒன்று பேசிக்கொள்ளுமாறு
அமைக்கப்பட்ட மணி அது
மிக நீண்ட நாள்
நெடுங்கனவு அது எனக்கு
ஒரு சதுர முற்றமும்
சிறிய சமையலறையும்
எனக்கு மட்டுமேயான படுக்கை அறையும்
நான்கு இலைகள் மட்டும் செடியை கொண்ட
என் வீட்டிற்கான
அழைப்பு மணி அது
எங்கு அழைப்பு சத்தம் கேட்டாலும்
தானாக திரும்பி பார்ப்பது
இயல்பாகி விட்ட
ஒரு நொடியின் முடிவில் தோன்றியது
என் வீட்டுக்கும் தேவையான
சத்தத்தின் ஒலி
குடிபோதையில் உன்னால்
தட்டியும்
உதைத்தும்
உடைக்கப்பட்டுவிட்ட கதவு
இனிமேல் என்னைப்போலவே அழாது
காயங்களை சுமந்து
உனக்கான மரணம்
கதவற்ற வாசலில் கைகட்டி வேடிக்கை
பார்த்துக்கொண்டிருக்கிறது
அதற்கான ஒலியை பதிவு செய்ய
அழைப்பு மணி சத்தம் கேட்டதும்
கதறி அழ ஒத்திகை
நடந்து கொண்டிருக்கிறது
சத்தமில்லாமல்
Friday, October 23, 2009
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
வலிக்கும் சொற்களின் நிதர்சனம்
எவ்வளவு நிஜம்.. அந்த கடைசி வரிகளில்..:(
GR8... That was AWESOME (Sorry tamila type pannura alavukku porumaiya irukka mudiyala)
Thanks Nesamithran, Sankar, Ivann
Post a Comment