Wednesday, October 21, 2009
உரையாடல்
வெகு இயல்பாகத்தான் தொடங்கியது
உனக்கும் எனக்குமான உரையாடல்
என் வீட்டுள் நுழைந்த ஒரு நிழல் மிருகம்
பற்றி நான் வர்ணித்ததை
மிகக் கவனத்துடன் நீ கேட்க ஆரம்பித்தாய்
என் ஜன்னல் வழி நுழைந்த
அந்த மிருகம்
என் இருப்பை ஆட் கொண்டதை
உன் கண்கள் விரிய கேட்டாய்
என் வரவேற்பு அறையில்
எனக்கு மிக அருகில் அமர்ந்து
அது நாளைய தினசரியை
வரி விடாமல் படித்தது என் கண் போகும் திசை எல்லாம்
நாற்காலியில் அமர்ந்த படியே
நான் உறங்கிப் போன நிமிடத்தில்
என்னுள் என் கருவறை வாசல்
தட்டித் திறக்காமல் உள் நுழைந்தே விட்டது
அதனுடன் கை பற்றி
என் சுவற்று சிலந்தியும்
கருவறை வாயிலில் கூடு கட்டிவிட்டது
என் படுக்கையறையில் ஒளிந்திருந்த
நாய்களின் கலவியின்
நேற்றைய மிச்சத்தில் உருவான
பருந்தொன்று தனியே
என் மார்பின் நடுவே சிறகடித்துக்
கொண்டிருக்கிறது
முலைக்காம்பில் வெடித்து சிதறும்
என் முதல் பால் சுவைக்க
நம் உரையாடலின் சுவை உணர்ந்த படியே
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2154
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
மெய் சிலிர்க்க வைக்கின்றன தோழியின் கவிதைகள்..வாழ்த்துக்கள்
கவிதையின் தொனி மற்றும் போக்கை மற்றும் முயற்சி போல தெரிகிறது இடற வைக்கும் சொற்களால் ஆக்கப் பெற்றிருக்கிறது
Nandri Natpu and Nesamithran.
Nesamithran,
sila nerangalil nam ethir thondrum vaarthaigal nam kaipidithu azaithu sellum appadi oru santharpathil uruvanathu ithu.
Post a Comment