Monday, December 21, 2009

சிறகெரியும் வெண்புறா
















உனக்கும் எனக்கும் இடையில்
ஒரு மெல்லிய வெண்புறா
பறந்து கொண்டே இருக்கிறது
இடம் வலமாய்
சோர்வு இல்லாது இலக்கில்லாது

நீ எனக்காய் சேர்த்து வைத்த
காமம் என் மூக்கின் நுனியில்
சிந்தி விட்டு செல்கிறது

அதன் சிறகின் ஓசைக்கும்
சிலிர்ப்பவளாக நானும்
அதன் உடலின் ருசிக்காக
காத்திருப்பவனாக  நீயும்


என் சிறகெரித்து எனக்கான வானம்
தயார் செய்கிறாய்
எரியும் வாசனை நுகர்ந்து
உனக்காய் வாசனை திரவம் சேமிக்கிறாய்

பொசுங்கும் சிறகிலிருந்து
உன் கூட்டுக்கான வண்ணம் அடிக்கிறாய்

கற்பனைத் தெருமுனையில்
அமர்ந்திருக்கிறோம்
குளிருக்கு இதமாய்
நம் காதல் எரித்தவாறே

கனவுகளில்தான் என் காமம்
கொழுந்து விட்டு எரிகிறது
பரவசமூட்டும் இடம் தேடி
என் விரல் அலைகிறது

ஏதோ சாதித்து விட்டதாய்
ஒவ்வொரு இயங்குதலின் முடிவில்
பெருமையாய் முகம் பார்க்கிறாய்
உள்ளுக்குள் பொங்கும்
எச்சிலை எனக்குள்ளேதான்
நான் உமிழ்ந்து கொள்ளுகிறேன்
உனைப்பார்த்து சிரித்தபடியே

 எத்தனை முறை எரித்தாலும்
மீண்டும் பிறக்கிறது
ஒவ்வொரு விடியலிலும்

பதின்ம வயதில் தோன்றி
இன்றும் பறக்கும் என் வெண் புறா

19 comments:

தம்பி... said...

உணர்வுபூர்வமான பதிவு...

லெமூரியன்... said...

\\எரியும் வாசனை நுகர்ந்து
உனக்காய் வாசனை திரவம் சேமிக்கிறாய்.......//

:-) ரசித்த வரிகள் இது.!

\\உள்ளுக்குள் பொங்கும்
எச்சிலை எனக்குள்ளேதான்
நான் உமிழ்ந்து கொள்ளுகிறேன்...........///

:-( :-(
பயம்மா இருக்கு.!

\\கற்பனைத் தெருமுனையில்
அமர்ந்திருக்கிறோம்........//

யதார்த்தத்தை மீறிய கற்பனைகளே சில நேரங்களில்
ஒரு கிறக்கத்தை உண்டாக்கும்..!

:-) :-) :-)
காமத்துப் பால் ?????

butterfly Surya said...

வித்தியாசமான வார்த்தை விளையாடல்.

அருமை.

ப்ரியமுடன் வசந்த் said...

//கற்பனைத் தெருமுனையில்
அமர்ந்திருக்கிறோம்
குளிருக்கு இதமாய்
நம் காதல் எரித்தவாறே
//

ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க அந்த கற்பனையில்தான் எவ்வளவு சுகம் இருக்கிறது...!

Cable சங்கர் said...

:) இன்னும்..இன்னும்..இன்னும்..

பா.ராஜாராம் said...

சரி,நாங்க வெளியவே பேசிக்கிட்டு இருக்கோமே..

எப்படி அல்லது எப்போ உள்ளிருந்து பேசுவது?

மற்றொன்று,அனு!

sathishsangkavi.blogspot.com said...

//கனவுகளில்தான் என் காமம்
கொழுந்து விட்டு எரிகிறது
பரவசமூட்டும் இடம் தேடி
என் விரல் அலைகிறது//

அழகான வரிகள்........

மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டுகிறது உமது கவிதை....

Jerry Eshananda said...

கவிதை சிறகடித்து பறக்கிறது வெண்புறா.

அன்பேசிவம் said...

பா.ரா. சொல்வதுபோல உங்களைப்போல உள்ளிருந்து பேசப்போவது எப்போது?

\\எரியும் வாசனை நுகர்ந்து
உனக்காய் வாசனை திரவம் சேமிக்கிறாய்.......//
ஒரு திரைப்படத்தின் மையக்கரு ஒரே வரியில்.....

//அதன் சிறகின் ஓசைக்கும்
சிலிர்ப்பவளாக நானும்
அதன் உடலின் ருசிக்காக
காத்திருப்பவனாக நீயும்//

ம்ம்ம்...

அடிச்சி ஆடுங்க...

Paleo God said...

//கற்பனைத் தெருமுனையில்
அமர்ந்திருக்கிறோம்
குளிருக்கு இதமாய்
நம் காதல் எரித்தவாறே
//

எனக்கும் ரொம்ப பிடிச்ச வரிகள்..::))
SUPER..!

S.A. நவாஸுதீன் said...

///அதன் சிறகின் ஓசைக்கும்
சிலிர்ப்பவளாக நானும்
அதன் உடலின் ருசிக்காக
காத்திருப்பவனாக நீயும்///

///எரியும் வாசனை நுகர்ந்து
உனக்காய் வாசனை திரவம் சேமிக்கிறாய்///

///கற்பனைத் தெருமுனையில்
அமர்ந்திருக்கிறோம்
குளிருக்கு இதமாய்
நம் காதல் எரித்தவாறே///

ரொம்ப அருமையா இருக்கு. மிகவும் பாதித்த, ரசித்த வரிகள்

பூங்குன்றன்.வே said...

//கற்பனைத் தெருமுனையில்
அமர்ந்திருக்கிறோம்
குளிருக்கு இதமாய்
நம் காதல் எரித்தவாறே//

மிகவும் யோசிக்க வைத்த வரிகள்..

இராஜ ப்ரியன் said...

கவிதை........... கவிதை ............கவிதை ..................... :)

அண்ணாமலையான் said...

மிக நன்றாய் இருக்கிறது..

தோழி said...

Thanks a lot for each and every individual

Aravindh Narayanan said...

உனது வரிகளில் எனது எண்ணங்களை காண முடிந்தது !
தலைப்பிலேயே தாக்கி விட்டாயடி ....

தொடரட்டும் !!!
ரசிப்புடன் காத்திருகி(றேன்)றோம்

ராஜ சேகர் said...

தோழினு பேரு வச்சுக்கிட்டு உங்களுக்கு ஏன் ஆம்பளைங்க மேல இப்படி ஒரு பகைமை??

எப்போ பாரு இந்த பாவப்பட்ட ஆண்சாதிய குறை சொல்றதும் குத்தம் சொல்றதுமே நோக்கமா இருக்கு..

இதுக்கு என் சக வர்கத்தினர் பாராட்டு வேற..அட ராமா!!

Trails of a Traveler said...

Is it a rule that all your poems have to be so hard?

Bharathi said...

/*
ஏதோ சாதித்து விட்டதாய்
ஒவ்வொரு இயங்குதலின் முடிவில்
பெருமையாய் முகம் பார்க்கிறாய்
உள்ளுக்குள் பொங்கும்
எச்சிலை எனக்குள்ளேதான்
நான் உமிழ்ந்து கொள்ளுகிறேன்
உனைப்பார்த்து சிரித்தபடியே
*/
தோழி ஆண்கள் மேல் ஏன் இந்த வெறுப்பு???