Saturday, December 19, 2009

பிரார்த்தனை

இந்த ஒரு வாரம் மிகப் பெரிய சவால் எனக்கு. எனது வாழ்நாளில் நான் பேசாமல் இருந்ததாக சரித்திரமே இல்லை. ஆனால் இன்று அந்த சரித்திரம் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் முழுக்க நான் அமைதியாக இருக்க வேண்டியது அவசியம் நான் எப்போதும் பேசவேண்டும் என்றால். பார்ப்போம். தொண்டையில் இருக்கும் ஒரு சிறு பிரச்சினையினால் ஒரு வாரம் பேசக்கூடாது என்று டாக்டர் சொல்லி இருக்காங்க. நண்பர்களே உங்களுக்கு எல்லாம் இந்த ஒரு வாரம் ரெஸ்ட். அடுத்த வாரம் வருவோம்ல :)


எவ்வளவு விளையாட்டாக பேசினாலும் ஒரு சிறு பயம் இருந்து கொண்டே உள்ளது. பிரார்த்தனையை மட்டுமே நம்பியுள்ளேன்.

வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய அனுமதி கேட்டுள்ளேன் அலுவலகத்தில். பார்ப்போம். இந்த வாரம் நிறைய படிக்கவும் கேட்கவும் முடிவு செய்துள்ளேன். ஏதாவது நல்ல வீடியோ, ஆடியோ இருந்தால் அனுப்பி வைக்கவும் அல்லது டவுன்லோட் செய்ய சிபாரிசு செய்யவும்.  (gmail id : anuradan@gmail.com)

நன்றி.

14 comments:

முரளிகுமார் பத்மநாபன் said...

i too pray for your better helath. get well soon, Friend.
:-)

தோழி said...

Thanks Murali

பூங்குன்றன்.வே said...

சீக்கிரம் குணமடைந்து வந்து எங்களை கவிதை மழையில் திக்குமுக்காடி வைக்க இயற்கை கடவுளை வேண்டுகிறேன் தோழி.

பலா பட்டறை said...

// பூங்குன்றன்.வே said...
சீக்கிரம் குணமடைந்து வந்து எங்களை கவிதை மழையில் திக்குமுக்காடி வைக்க இயற்கை கடவுளை வேண்டுகிறேன் தோழி//

HE IS MY FRIEND..SO I REPEAT THE SAME..:)) GET WELL SOON. GOD BLESS YOU.

தோழி said...

Thanks Poongundran. Thanks Pala pattarai :)

varuvomla :)

அண்ணாமலையான் said...

விரைவில் பூரண குணமடைந்து, பதிவுலகை எப்போதும் போல் தொடர்ந்து கலக்க எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு எல்லா சக்தியையும் கொடுப்பாராக,,,,

தோழி said...

thanks Annamalaiyaan

ஆரூரன் விசுவநாதன் said...

பேசா மடந்தையாய் ஆக்கப்பட்ட தோழியே, பேசவதில் தானே பிரச்சனை.....,எழுததுப் பணிக்கென்ன தடை....?

விரைவில் உடல் நலம் பெற வாழ்த்துக்கள்......

ஸ்ரீநி said...

தோழி
ஒன்னும் ஆகாது ......
ஆனா ஒரு வாரம் பேசத்தான கூடாது ..
எழுதுங்களேன் !!!!!!!

எலே DONT WORRY BE HAPPY............

S.A. நவாஸுதீன் said...

வெகு விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் சீக்கிரம் வாங்க தோழி

ஜோதி said...

மீண்டும் நலமுடன் உலா வர
பிரார்த்திக்கிறேன்.

ட்ரம்ஸ் சிவமணியோட மகாலீலா
கேட்டிருக்கிங்களா
லிங்க் இதோ
http://www.123musiq.com/ASivamani-Mahaleela.htm
இதுல என்னோட favourite - infinity voice of osho

இராஜ ப்ரியன் said...

சின்னவயதில் தேர்வுக்கு வேண்டிக்கொண்டதோடு சரி, உங்களுக்காக மீண்டும் வேண்டிக்கொள்கிறேன் விரைவில் குணமடைந்து திரும்புக ..................

பாமாலைக்கு உடல்நிலை சரியில்லை
பூமாலை வைத்து பூஜை செய்கிறேன்
மீண்டும் கவிமாரி பொழிய .............

ஸ்ரீ said...

விரைவில் குணமடைவீர்கள்.
பிரார்த்திக்கிறேன்.

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

ஓவராப் பேசினால் இப்படித்தான்! எல்லாரும் உனக்காக உருகும் போது நான் கொஞ்சம் திட்டிப் பார்க்கிறேனே! அந்த டாக்டர் வாழ்க!