Friday, December 4, 2009

நம்பிக்கை
















நம்பிக்கையின் மீதான
நம்பிக்கை சிறிது சிறிதாக
குறைந்து கொண்டே வருகிறது

வலிகளும் வாலிகளும் நிறைந்த
கானகமாக உள்ளது வாழ்க்கை
எந்த மரத்தின் பின்
எவன் ஒளிந்திருப்பானோ
இல்லை
எது ஒளிந்திருக்குமோ
தெரியவில்லை

சந்தர்ப்பங்களுக்காக
எதன் பின்னாவது காரணம்  சொல்லி
மறைந்து போகிறார்கள் மனிதர்கள்

கூடவே நடந்து வரும் நிழல்
திடீரென காணாமல் போகிறது

உள்ளுணர்வு பல நேரங்களில்
சரியாகத்தான் இருக்கிறது
இதுவும் கடந்து போகுமென்ற
வாசகம் உரைக்கும்போது

அனைத்தும் கடந்து போகுபவையாக
மட்டுமே இருப்பதுதான்
நிதர்சனமாக உள்ளது

மழை குளித்த மரத்தின்
அடியில் தங்கும்போதும்
உணர்வின் வெப்பம் எரித்தபடியே
இருக்கிறது

காலடி பட்டு இறந்துபோன
வண்ணத்துப் பூச்சியின் இறகைப்
பார்க்கும்போதெல்லாம்
அருகில் படுத்து
உறங்கிவிடத் தோணுகிறது

என் உள்ளங்கை முழுதும்
அதன் நிறங்களின் நிறமாற்று பேதம்
மெல்ல முன்னேறுகிறது

தேன் எடுப்பதாய் சபதம் போட்டு
காணாமல் போன வண்டொன்று
வெகு நேரமாய் உள்ளே
சத்தமிட்டுக் கொண்டிருக்கிறது

நடக்கும் பாதை நீண்டு கொண்டே இருக்கிறது
ஒவ்வொரு பயணத்திலும்

7 comments:

Cable சங்கர் said...

இதிலும் முதல் வரிகள் நிஜமான வார்தைகள்

/வலிகளும் வாலிகளும் நிறைந்த
கானகமாக உள்ளது வாழ்க்கை
எந்த மரத்தின் பின்
எவன் ஒளிந்திருப்பானோ
இல்லை
எது ஒளிந்திருக்குமோ
தெரியவில்லை
//

வாழ்கையின் நிகழ்வுகளை இதை விட இயல்பாக சொல்ல முடியுமா என்று தெரியவில்லை அனு

கேபிள் சங்கர்

sathishsangkavi.blogspot.com said...

//காலடி பட்டு இறந்துபோன
வண்ணத்துப் பூச்சியின் இறகைப்
பார்க்கும்போதெல்லாம்
அருகில் படுத்து
உறங்கிவிடத் தோணுகிறது

என் உள்ளங்கை முழுதும்
அதன் நிறங்களின் நிறமாற்று பேதம்
மெல்ல முன்னேறுகிறது//

உண்மையான வரிகள்..........

அன்பேசிவம் said...

காலடி பட்டு இறந்துபோன
வண்ணத்துப் பூச்சியின் இறகைப்
பார்க்கும்போதெல்லாம்
அருகில் படுத்து
உறங்கிவிடத் தோணுகிறது

அனு டச்சிங்கா இருக்கு.....

மென்பொருள் எழுத தொடங்கிவிட்டீர்கள். :-)

லெமூரியன்... said...

\\காலடி பட்டு இறந்துபோன
வண்ணத்துப் பூச்சியின் இறகைப்
பார்க்கும்போதெல்லாம்
அருகில் படுத்து
உறங்கிவிடத் தோணுகிறது....//

உயிரற்ற ஓவியமாய் வண்ணத்து பூச்சி....!
துக்கத்தின் வெளிப்பாடு தூக்கமா??


\\உள்ளுணர்வு பல நேரங்களில்
சரியாகத்தான் இருக்கிறது
இதுவும் கடந்து போகுமென்ற
வாசகம் உரைக்கும்போது...//

கடைசி கட்ட நம்பிக்கை அது..!


\\தேன் எடுப்பதாய் சபதம் போட்டு
காணாமல் போன வண்டொன்று
வெகு நேரமாய் உள்ளே
சத்தமிட்டுக் கொண்டிருக்கிறது...//

வாசம் பிடித்து, வண்டு வந்து சேரும் வெகு விரைவில்...!
:-)
தேநெடுக்குமா தெரியாது!
:-) :-)

நல்லா இருக்கு அணு..!

பா.ராஜாராம் said...

என்ன அனு,இந்த கொல்லு கொல்லுறீங்க.ரொம்ப பிடிச்சிருக்கு.

Mohan R said...

அனைத்தும் கடந்து போகுபவையாக
மட்டுமே இருப்பதுதான்
நிதர்சனமாக உள்ளது

Nice lines

Kavidhai romba sooper

ராஜ சேகர் said...

கவிதையோ வாழ்க்கையோ..நம்பிக்கையை மட்டும் எப்போதும் இழக்க வேண்டாம் தோழி..