Saturday, July 31, 2010

உயிர்த்தெழுதல்














இருட்டின் மத்தியில் நடந்து கொண்டிருக்கிறோம்
மெல்லிய இசை சுற்றிலும் அடர்ந்திருக்கிறது

நேற்றிரவு தொடங்கிய பயணம் அது
மரங்கள் பேசும் ஓசை மட்டும் கேட்டபடி
நகர்ந்து கொண்டிருக்கிறோம்
எங்களின் நிழல்களோடு

சுற்றிலும் இரவின் இசை
வழி நடத்திக் கொண்டிருக்கிறது எங்களை

அமைதியின் கணம் தாங்க இயலாத
நொடியில் தீர்மானித்தோம்
இறந்து போவதென்று


எடுத்த முடிவின் படி
ஒருவர் இன்னொருவரை
உண்ணத் தொடங்கினோம்


பயணத்தின் முதல் நொடி போல
கைகளில் இருந்து
தொடங்கினோம்

விரல் இழந்த உள்ளங்கைகளில்
மெல்லியதாய் முத்தங்கள் பரிமாறிக்கொண்டோம்

மிச்சமிருந்த காதல் பிடுங்கி
கிளைகளில் மாட்டி வைத்தோம்
அடையாளத்திற்காக  


இன்னும் பேச்சுத் தொடங்கியாக வில்லை

திடீரென உணர்ந்தோம்
பின் வந்த நிழல் காணாமல் போனதை

பல காதலின் சாயல்
இதயத்தின் உள் புகுதலை உணர்ந்தோம்
தள்ளி நின்று வேடிக்கை பார்த்தோம்

சட்டென மரத்தின் கிளைகளில் இருந்து
நாங்கள் இறங்கிப் போவதை பார்த்தோம்
கடந்து வந்த வழியில்

எனினும் பயணம் முடியவில்லை
கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறுகிறது
எங்களின் உண்ணுதலும்
உண்ணுதலின் நடுவே நடையும்


மீண்டும் எங்கள் படுக்கையில்
நாங்கள் உயிர்த்தெழுந்தோம்
விரல் இல்லா உள்ளங்கைகளோடு

10 comments:

அன்பேசிவம் said...

Haaaaaaaa..... Finally she comes.....

back with a bang..
so how are u thozhi?
iravilum iruttilum nilalkal avasiyamaa, enna?

ஆதவா said...

வாவ்...வாவ்... வாவ்....

ஒரு சிறுகதையின் விவரிப்போடு தொடங்கியிருக்கும் இக்கவிதை, சிறப்பாக இருக்கிறது. பழைய மாவோ என்று சலிப்பாக படித்தேன்... இல்லையில்லை.. புதிய சரக்கு.. நெடுகிலும் நல்ல வரிகள். கவிதை உணரப்படுதலால் அது கவிதையென்போம்.. இது அத்தகையது!!
வாழ்த்துக்கள்.

நேசமித்ரன் said...

நல்லா இருக்கு :)

லெமூரியன்... said...

ஒரு வேளை உங்க கவிதையை படிச்சி ரொம்ப நாள் இடைவெளி ஆனதாலையா என்னனு தெரியலை...
கவிதை எனக்கு வேறொரு அர்த்தத்திலேயே புரியுது...
நீங்க எத நெனைச்சி எழுதினீங்கனு தெரியலை...! :-) :-)
இப்டி புரிஞ்சிகிட்டேனு சொன்னா கொன்னு போட்ருவீங்க... ! :-)
அதனால கவிதை நல்லா இருக்குனு மட்டும் சொல்வேன்...
ஆனாலும் ஒரு மனக்குறை...
உண்ணுதல் முழுசா முடியும்னு ஆர்வத்தோட படிச்சா...
தொடரும் போர்டு போட்டீங்க...! :-) :-) :-) :-)
என்னவோ போங்க ....
நமக்கு உலக விவரமே பத்த மாட்டேங்குது...! :-) :-) :-)
நெடு நாள் கழிச்சி வலையுலகிற்கு வந்திருக்கும் வலை(வன) தேவதையே .. :-) :-)
வந்தனம்....
உங்கள் சேவை வலையுலகத்தின் thevai ...

Mohan R said...

Nice one

Unknown said...

திருப்பூர் வலைப்பதிவர்களுக்கு வணக்கம்,

நாங்களும் வலைப்பூ(தமிழ் கூறும்) நல்லுலகத்தில்
அடியெடுத்து வைத்து விட்டோம்.

அலைப்பேசியில் ஆலோசனைகள் வழங்கிய வாய்ப்பாடி குமார், வெயிலான் ஆகியோர்க்கு நன்றிகள். (அறிமுக உபயம்:வா.மு.கோமு-வின் நண்பர் மகேந்திரன்)

தட்டுத்தடுமாறி "தத்தகா, பித்தகா" என்று இரண்டு அடிகள் வைத்து விட்டோம்.இன்னும் சரியாக நடைப்பயில வரவில்லை, எப்படியாயினும்; உங்கள் உதவி அதிகம் தேவைப்படுகிறது. உதவுங்கள்.

வந்து பாருங்கள் bharathbharathi.blogspot.com
உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்...
நன்றி..

அன்புடன்...
எஸ்.பாரத்,
மேட்டுப்பாளையம்...

பாற்கடல் சக்தி said...

///எடுத்த முடிவின் படி
ஒருவர் இன்னொருவரை
உண்ணத் தொடங்கினோம்///

வேறென்ன சொல்ல..

தோழி said...

nejammave romba naal kalichu vanthirukken. Thanks all. :)

ராகவன் said...

Thozhi,

uyirththezhuthal romba nalla irukku...

anbudan
Ragavan

ஜெயசீலன் said...

மிக ரசித்தேன் தோழி... நல்லக் கவிதை...