Friday, May 28, 2010

முதல் காதல் கடிதம்

இன்று மாலைதான் வந்து சேர்ந்திருந்தது
எனக்கான முதல் காதல் கடிதம்

எப்போதோ எங்கிருந்தோ அனுப்பப்பட்டு
இப்போதுதான் வந்திருக்கிறது
என் கனவின் முதல் படி
நிறைய பறவைகளின் சத்தங்களுக்கிடையில்
அதைத் திறக்கிறேன்

முதல் சில வரிகள்
வண்ணங்கள் நிறைந்தவையாய்
மாறிப் போயிருக்கிறது
என் தோட்டத்தின் பூக்களுள்
சென்று மறைகின்றன

மெல்ல மெல்ல நான் காதல் கொண்ட
நிமிடங்கள் என்னுள் விரிகின்றன

எனை ரசித்த அவன்
என் கவிதை கொண்டாடிய அவன்
என் இயல்பைப் புகழ்ந்த அவன்
கொஞ்சம் கொஞ்சமாய் இதழ் தீண்டி
உயிர் நுழைந்தவன்

தொலை பேசி நிமிடங்கள்
நீண்டு கொண்டே இருந்த காலங்கள்

கைப் பிடித்து காதல் சொல்லி
கனவுகளில் வாழக் கற்றுகொடுத்தவன்
தலையணைகளுக்குள் மென் காமம்
தூவி விட்டு சென்றவன்

இரவுகளின் நீள் பொழுதுகளில்
அருகாமை உணரச் செய்தவன்

இன்றும் என் வியர்வையின் மணம்
அவனுடையதாய் இருப்பதை உணர்கின்றன
உடலின் வியர்வைச் சுரப்பிகள்

மணம் உணர்ந்த மனத்துடன் கடிதம் தொடர்கிறேன்

தொடரும் வார்த்தைகள் கட்டெறும்புகளாய்
நிறைகின்றன என் அறைச் சுவற்றில்
அவன் திருமண மாலையின் மணத்துடன்

காரணங்கள் அடுக்கடுக்காய்
படியேறி வருகின்றன
கதவடைக்கத் தெரியாமல்
இன்னும் கடிதத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
கடிதத்துடன் மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்

எறும்புகள் என் கால் விரல் சுவைத்துத்
தின்றபடி முன்னேறிக் கொண்டிருக்கின்றன
ஒவ்வொரு பாகமாய் ருசி பார்க்க!!!!

17 comments:

வானம்பாடிகள் said...

நல்லாயிருக்குங்க கவிதை.

NESAMITHRAN said...

கட்டெரும்புகளாய் ?


று ‘ ?


கவிதை நல்லா இருக்கு ஆனா ஃபார்மல இல்ல நீங்க

:)

Cable Sankar said...

மீண்டும்...:)

kutipaiya said...

அருமையா இருக்கு தோழி..
//எறும்புகள் என் கால் விரல் சுவைத்துத்
தின்றபடி முன்னேறிக் கொண்டிருக்கின்றன
ஒவ்வொரு பாகமாய் ருசி பார்க்க!!!!//
வலி..

Satish N said...

சோகமாக முடித்து விடுவீரோ என்று பயந்தேன், நல்ல வேளை அப்படி ஒன்றும் நடக்கவில்லை ..
என்னை முயகவும் கவர்ந்த வரி ...
"கைப் பிடித்து காதல் சொல்லி
கனவுகளில் வாழக் கற்றுகொடுத்தவன்
தலையணைகளுக்குள் மென் காமம்
தூவி விட்டு சென்றவன்"

மிகவும் அருமை ... வாழ்த்துக்கள் என் ஆசானுக்கு :)

D.R.Ashok said...

நல்லாயிருக்குங்க

தோழி said...

Nandrigal Vaanambaadigal.

Nesamitran - Thanks for the correction. Form-ku vanthiduvom :)

Thanks Cable Sankar

தோழி said...

Thanks Kuttipaiya

@ Sathish - :) Aasanaaa!!!! Sachuputtaingale!!!!!

@ Thanks Ashok

பேநா மூடி said...

very gud....,

கனிமொழி said...

நல்லா இருக்கு தோழி...
கட்டெறும்பு வரிகள்...

Naresh Kumar said...

கவிதை மிக நன்று!

மனதுடன் பேசிக் கொள்ளும் வித்தையை கவிதையில் அருமையாய் கொணர்ந்துள்ளீர்கள்!!!

சி. கருணாகரசு said...

நல்லாயிருக்குங்க... தோழி.

தியாகு said...

கவிதை நல்லா இருக்குன்னு சொல்லவரலைங்க

ஆனா நீங்க காதலை உணர்ந்ததை நல்லா சொல்லி இருக்கீங்க

வார்த்தைகள் அதிகம் நிரம்பி இருக்குன்னு நினைக்கிறேன்

இன்னும் வார்த்தைகளை குறைக்கலாம்னு நினைக்கிறேன்

ஒரு கவிதையை செதுக்க ஒரு கவிஞர் ஒரு வருடம் எடுத்துக்கொண்டாராம்

ஆனால் நமக்கு பதிவுலகம் வந்ததால் உடனே எழுதிடனும்னு நினைக்கிறோம் அதை செதுக்க போதிய அவகாசம் நாம் தறுவதில்லை :)

மேலும் எழுதுங்கள் கவிதைகள் மட்டுமே மனதுக்குள் புகுகின்றன ஆயிரம் உரைநடைகள் இருந்தாலும்

தோழி said...

comments potta anaithu nanbargalukkum enathu nandrigal. romba naal blog pakkam vara mudiyala. i'll try to write more to bring out better poems. thanks

ப்ரின்ஸ் said...

//இன்றும் என் வியர்வையின் மணம்
அவனுடையதாய் இருப்பதை உணர்கின்றன
உடலின் வியர்வைச் சுரப்பிகள்//

nice....

கவிநா... said...

உணர்ந்து, ரசித்து, மகிழ்ந்த காதல் நன்கு புலப்படுகிறது வரிகளில்...
உங்கள் கவிதைக் கட்டெறும்பு இன்னமும் ஊர்ந்துகொண்டிருக்கிறது என் மனதில்...

கவிநா... said...

உணர்ந்து, ரசித்து, மகிழ்ந்த காதல் நன்கு புலப்படுகிறது வரிகளில்...
உங்கள் கவிதைக் கட்டெறும்பு இன்னமும் ஊர்ந்துகொண்டிருக்கிறது என் மனதில்...