Thursday, March 4, 2010
நெரிக்கும் இழப்பு
சிநேகிதிகளின் வீடுகளுக்கு செல்வதில்
பெரும் தயக்கம் வருகிறது
இப்போதெல்லாம்
வார விடுமுறை நாட்களின் மேல்
கோபம் வருவதைத்
தவிர்க்க முடியவில்லை
இயல்பாகக் கூட
அவர்களின் கணவர்களை பற்றி
விசாரிக்க இயல்வதில்லை
"நன்றாக இருக்கிறாயா" என்பதுடன்
கேள்விகள் முடிந்து விடுகிறது
தோழி ஒருத்தியின்
குழந்தைப் பேறு பற்றி
இன்னொரு தோழியின் மூலம் மட்டுமே
தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது
சிநேகிதிகளின் வீடுகளில்
வரவேற்பறை தாண்டி
பாயும் கண்களை மிகவும்
சிரமப்பட்டு அடக்க வேண்டியுள்ளது
சாதாரணமாக பகிர்ந்து கொண்டிருந்த
காதல்களும் காமங்களும்
திடீரென தனிமை சாயம்
பூசிக்கொண்டுள்ளது
வார்த்தைகள் மாறி
கண் ஜாடைகள்
அதிகம் பரிமாறுகிறது
மூடப் பட்ட கதவுகளின் பின்னால்
இயல்பாய் இருக்க நடித்தல்
கழுத்தை நெரிக்கிறது
கணவனை இழத்தல் அத்துணை பாவமா?
உயிரோடோ அல்லது இல்லாமலோ!!!
Subscribe to:
Post Comments (Atom)
26 comments:
நெரிக்கும் இழப்பு,தகிக்கும் நெருப்பு.
//சிநேகிதிகளின் வீடுகளில்
வரவேற்பறை தாண்டி
பாயும் கண்களை மிகவும்
சிரமப்பட்டு அடக்க வேண்டியுள்ளது//
இது சரிங்க....
//சிநேகிதிகளின் வீடுகளில்
வரவேற்பறை தாண்டி
பாயும் கண்களை மிகவும்
சிரமப்பட்டு அடக்க வேண்டியுள்ளது//
class.super.
தெருவில் நடக்கவே தயக்கமாய் இருக்கிறது ..
வெளியில் கிளம்பும் ஒருவருக்கு
வேண்டாத சகுனமாய் ஆகிவிடுவோமோ என்று
கூனி குறுகி நடைபயில போவதை விட
நோய் பெருகி அழிவதே மேல் என்று எண்ணம் வந்து விட்டது
இழப்பை விட கொடிதாய்
இருத்தல் ஆனது இன்று
என்னவோ பாவம் தான்
நான் செய்து இருக்க வேண்டும் ......
அழுத்தமான வரிகள்! உணரமுடிகிறது
மனதை கணக்க செய்யும் வார்த்தைகள்
http://vittalankavithaigal.blogspot.com/
மிக அருமையான பதிவு... எத்தன கஷ்டம்?
//சாதாரணமாக பகிர்ந்து கொண்டிருந்த
காதல்களும் காமங்களும்
திடீரென தனிமை சாயம்
பூசிக்கொண்டுள்ளது//
-----......-----!?
வலிகளின் வெளிப்பாடு..:(
கணவனை இழத்தலுக்கான உங்களது பர்ஷெப்ஷன் சூப்ப்ர்
அனூ....?
எனக்கும் சேர்த்துத்தான் இருக்கிறது வரிகள், வலிகள். பால் மாற்றிப்படித்துக்கொள்கிறேன்.. :-)
simply super...
தனிமைக்கு பதிலுரையா?
நல்லாருக்கு அனு.
உண்மைதான்... எல்லோரும் அப்படிதான்.. சூழல்கள் மட்டும் மாறிக்கொண்டிருக்கும்...
ஆனால்.. தனித்து வாழ்தலின் சுகம் பற்றிய உணமையை போக போக புரிந்துகொள்வீர்கள் :)
கவிதை ரொம்ப நல்லாயிருக்கு தோழி.
//இயல்பாய் இருக்க நடித்தல்
கழுத்தை நெரிக்கிறது//
கனான சேதியை சில வார்த்தைகளில் இலகுவாய் சொல்லி விட்டீர்கள்
நோ சான்ஸ்... மிக அருமை,,,,
வேதனையின் வெளிப்பாடு கனமாய்...கவிதையாய்
ஹேய் அனு....!
வழக்கம் போல.....ஆனா உணர்வுப்பூர்வமா உணர்ந்து எழுதியதை போல....
நல்லா இருக்குபா...!
கழுத்தை நெறிக்கிறது வரிகள்.
Thanks a lot for all your comments and feedback.
மிக யதேச்சையாகத்தான் பார்க்க நேர்ந்தது உங்களது வலைப்பதிவை!!!
கவிதை வரிகள் உணர்த்தும் அர்த்தங்களும், கனமும் மிக அருமை!!!
நல்லதொரு கவிதைக்காக பாராட்டுவதா, அல்லது மிகச் சாதாரணமாக நடந்து கொண்டிருக்கும் அவலங்களுக்காக வருந்துவதா என புரியவில்லை!!!
அருமையான படைப்பு!
சிவா பதிவை தொடரும் பொழுது தங்களின் பதிவிற்கு வரும் வைப்பு கிட்டியது .. மிகவும் அழுத்தமான வரிகள்.. குறிப்பாக
//சாதாரணமாக பகிர்ந்து கொண்டிருந்த
காதல்களும் காமங்களும்
திடீரென தனிமை சாயம்
பூசிக்கொண்டுள்ளது//
இரண்டு வரிகளில் விட்டு விலகி செல்லும் நட்பை அருமையாக பத்தி செய்து உள்ளீர்கள் .. மிக அற்புதம்.. தொடர்து எழுதவும் தோழி ..
சிவா பதிவை தொடரும் பொழுது தங்களின் வலைப்பதிவை வரும் வாய்ப்பு கிட்டியது .. மிகவும் அழுத்தமான வரிகள்.. குறிப்பாக
//சாதாரணமாக பகிர்ந்து கொண்டிருந்த
காதல்களும் காமங்களும்
திடீரென தனிமை சாயம்
பூசிக்கொண்டுள்ளது//
இரண்டு வரிகளில் விட்டு விலகி செல்லும் நட்பை அருமையாக பத்தி செய்து உள்ளீர்கள் .. மிக அற்புதம்.. தொடர்து எழுதவும் தோழி ..
Post a Comment