Thursday, March 4, 2010

வீழும் நினைவுகள்




















வாழ்வின் விளிம்பில்
ஒட்டிக் கொண்டிருக்கிறது
வெறுமையின் கணங்கள்

நகர்ந்து கொண்டிருக்கும்
பேருந்து ஜன்னல்களில்
நம் நேரங்கள் காற்றில்
சலசலத்துக் கொண்டிருக்கிறது

திருமண மண்டபத்தின் சத்தத்தில்
மௌனக் கேவல்கள்
கரைந்து போய்க் கொண்டிருக்கிறது

பரிமாறப்பட்ட பந்தியில்
உணவோடு சேர்த்து
உணர்வுகளும் அனைத்தும்
வீணடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது

மாற்றப்படும் மாலைகளில்
கசங்கிப் போயுள்ளது
மறந்து போன சிலவும்
மறந்தே ஆகவேண்டிய பலவும்


சுற்றி நிற்கும் உறவுகளில்
உன்னைத் தேடிக் கொண்டுதான் உள்ளது
வாய் விட்டு சொல்ல முடியாத
நம் நினைவுகள்

விழுந்து கொண்டிருக்கிறேன்
விரல் பற்ற முடியாத ஆழத்தில்
விடை தெரியா வினாக்கள் சூழ்ந்த
அந்த காரத்தில்

எழ முடியாத ஆழம் எனினும்
உனக்காக ஆனதினால்
காதலுடன் சரிகிறேன்
எப்போதும் போல்

16 comments:

Trails of a Traveler said...

You dont have to fall! You are not going to fall!!

பா.ராஜாராம் said...

ரொம்ப பிடிச்சிருக்கு அனு.

சொல்லப்படாத,பேசப்படாத தருணங்களை,உணர்ந்தும் உணராத முகங்களை,தவிக்கும் உணர்வுகளை மிக அழகாக பதிகிறது கவிதை.

செல்லக்கண்ணம்மா என கொஞ்ச தோணும் வரிகள்.

ஒரு வார்த்தையை முன்னவோ,பின்னவோ நகர்த்த முடியாத கச்சிதம்.

இன்று வாசித்த ஆக சிறந்த கவிதை.

sathishsangkavi.blogspot.com said...

//மாற்றப்படும் மாலைகளில்
கசங்கிப் போயுள்ளது
மறந்து போன சிலவும்
மறந்தே ஆகவேண்டிய பலவும்//

அழகான, ரசித்த வரிகள்...

அன்பேசிவம் said...

வெல்கம் பேக அனு, உங்க டச் இல்லையே...?

சாரி அனு :-(

திருநாவுக்கரசு பழனிசாமி said...

//எழ முடியாத ஆழம் எனினும்
உனக்காக ஆனதினால்
காதலுடன் சரிகிறேன்
எப்போதும் போல்//

அருமை....

Cable சங்கர் said...

vtv effecta..?

nice

குட்டிப்பையா|Kutipaiya said...

Gud one anu - loved the last lines.. Superb!

சே.ராஜப்ரியன் said...

//மாற்றப்படும் மாலைகளில்
கசங்கிப் போயுள்ளது
மறந்து போன சிலவும்
மறந்தே ஆகவேண்டிய பலவும்//
ம்ம்மம்மம்ம்ம்ம்

பத்மா said...

எழ முடியாத ஆழம் எனினும்
உனக்காக ஆனதினால்
காதலுடன் சரிகிறேன்
எப்போதும் போல்

wow wow

ராஜ சேகர் said...

Beautiful one!! Speaks about many things that can't be spoken in words!

இராஜ ப்ரியன் said...

நல்லாயிருக்கு.......

தோழி said...

Thanks Ram. Hoping so !!!

தோழி said...

வாங்க பா ரா. ரொம்ப நாள் ஆச்சு உங்க கமெண்ட்ஸ் பாத்து. நல்லா இருக்கீங்களா? ரொம்ப நன்றி உங்க வழக்கமான ஸ்டைல்-எ கமெண்ட் போட்டதுக்கு.

தோழி said...

Thanks Sangkavi, Murali - ungalukku detaileda pathil anupparen appurama.

Thanks Thirunavukkarasu, Cable, Seetha

தோழி said...

Thanks Priya, Padma, Rajasekar, Iraja priyan, jerry

ஸ்ரீவி சிவா said...

கோர்வையான விஷயங்கள்... மிகவும் ரசித்தேன் தோழி.

படித்து முடித்ததும் துயரத்தின் பிசுபிசுப்பு மனதில் ஒட்டி கொண்டு விட்டது.