Tuesday, February 9, 2010
காத்திருக்கும் கோலம்
மெல்லிய இசைக் கோர்வையின்
ஒற்றை இழையின் ஊடே
நம் காதலின் ஓசை
தனியொரு பாதையில்
பயணம் செய்யும்
கொட்டிகொண்டிருக்கும்
மழையின் சத்தத்தில்
புது அர்த்தங்கள்
படித்துக் கொண்டிருப்போம்
இறுக மூடப்பட்ட ஜன்னலின் பின்னே
உன் மௌனங்களின் பின்னாலான
வலியினை உணர்கிறேன் எப்போதும் போல்
வலையைப் பின்னுகின்றன
சொல்லாமல் விட்டுப் போன
கடைசி முத்தங்களின்
முகவரிகள்
விரல் பின்னும்
அணைப்புகள் அந்நியப்பட்டு
நிற்கின்றன
ஒற்றைக் கேள்வியும்
அதனைச் சுற்றி வரும்
வெற்று பதில்களுமாய்
காலக் கடிகாரம் வேகமாய்
ஓடிக்கொண்டிருக்கிறது அதன் போக்கில்
நமக்கான ஒரு கூடு
காத்திருக்கிறது
நம்மை மட்டுமே குடியேற்றம் செய்ய
யாரோ வரைந்து போன கோலம் ஒன்று
நமக்கான நல்வரவுக்காக
பூசணிப்பூ சூடிக் கொண்டிருக்கிறது
ஏதோ ஒரு நொடியின்
தரிசனத்துக்காக
என் காலங்கள் அனைத்தையும்
குவித்து வைத்து அருகில்
அமர்ந்திருக்கிறேன்
Subscribe to:
Post Comments (Atom)
20 comments:
உன் மௌனங்களின் பின்னாலான
வலியினை உணர்கிறேன் எப்போதும் போல்//
அருமையான வரிகள்
யாரோ வரைந்து போன கோலம் ஒன்று
நமக்கான நல்வரவுக்காக
பூசணிப்பூ சூடிக் கொண்டிருக்கிறது
ஏதோ ஒரு நொடியின்
தரிசனத்துக்காக
என் காலங்கள் அனைத்தையும்
குவித்து வைத்து அருகில்
அமர்ந்திருக்கிறேன்...
ரொம்ப நல்லா இருக்குங்க அனு.
காத்திருப்பதுவும் எதிர்பார்த்திருப்பதுவும் தானே வாழ்க்கை
ஒரே நாளில் இரண்டுமுறை நல்ல கவிதை படித்தேன் நன்றி ......
உங்க ப்ளாக் தலைப்ப இப்ப உணர்ந்தேன்... நன்றி
//கடைசி முத்தங்களின்
முகவரிகள்
விரல் பின்னும்
அணைப்புகள் அந்நியப்பட்டு
நிற்கின்றன //
:)
//கொட்டிகொண்டிருக்கும்
மழையின் சத்தத்தில்
புது அர்த்தங்கள்
படித்துக் கொண்டிருப்போம்
இறுக மூடப்பட்ட ஜன்னலின் பின்னே//
அருமை..
நன்றி முரளி, பத்மா, இராஜப்ரியன்
நன்றி அண்ணாமலையான்
நன்றி நேசமித்திரன், cable சங்கர்
//இறுக மூடப்பட்ட ஜன்னலின் பின்னே...
//
நல்லா இருக்கு...
nalla iruku thozhi - ipdi positive'agavum adikadi vaanga :)
மறந்து போய் இந்த கவிதையை எழுதி விட்டீர்களா நட்பு?? இல்லை ஆண்களை நோக்கிய உங்கள் சாட்டை தொலைந்து போயிற்றா??
அத்தி பூத்தார் போல் இருந்தாலும் அருமையாக அழகிய பூகோலமாய் இக்கவிதை.. வாழ்த்துக்கள் மேலும் தொடர..
நன்றி கனிமொழி. நிச்சயம் முயற்சி செய்கிறேன் சீதா, உங்கள் கருத்துக்களுக்கு நன்றி
நன்றி நட்பு. ஆண்களின் மேல் சாட்டை வீசுவது என் நோக்கம் இல்லை. எனக்கு தோணுபவைகளை எழுதுகிறேன், அது யாரையாவது பாதிக்கும் பட்சத்தில் அது அவர்களின் மன ஓட்டமே தவிர என் எழுத்துக்கள் அல்ல. எனினும் உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்.
கவிதை மிக அருமையாக இருக்கிறது..தோழி...வாழ்த்துக்கள்...
கடைசி ஐந்து வரிகளில் வண்ணக்கோலம் ஜொலிக்கிறது.ரசித்தேன் தோழி.
//கொட்டிகொண்டிருக்கும்
மழையின் சத்தத்தில்
புது அர்த்தங்கள்
படித்துக் கொண்டிருப்போம்
இறுக மூடப்பட்ட ஜன்னலின் பின்னே//- superb anu
//கொட்டிகொண்டிருக்கும்
மழையின் சத்தத்தில்
புது அர்த்தங்கள்
படித்துக் கொண்டிருப்போம்
இறுக மூடப்பட்ட ஜன்னலின் பின்னே//- superb anu
//கொட்டிகொண்டிருக்கும்
மழையின் சத்தத்தில்
புது அர்த்தங்கள்
படித்துக் கொண்டிருப்போம்
இறுக மூடப்பட்ட ஜன்னலின் பின்னே//- superb Anu
Post a Comment