Monday, February 8, 2010
மொழியற்றக் கதறலின் ஓசை
இரு வேறு நிழல்களின்
முயக்கத்தில் உருவானவள் நான்
இருட்டின் இறுக்கத்தை புணர்வதின்
மகத்துவம் அறிந்தவள்
விட்டுப் போகும் மேகம் துரத்தி
முடிவில்லா பாதையில் பயணிக்கிறேன்
நீள்பாதையின் தூரத்தில்
ஒற்றை நிழல் ஓங்காரமாய் திரிகிறது
நான் விரும்பியவையும்
எனை விரும்பியவையும் ஆனவை
புது வேஷம் போட்டு நிற்கின்றன
நிரந்தர வலியொன்று
கொஞ்சம் கொஞ்சமாய்
ரத்தம் பாயும் எலும்பினுள்
குடியேறத் தொடங்கியுள்ளது
காற்று நிறையும் சுவாசப்பை
அழுக்கு சுமந்து
குமட்டுகிறது
நானாய் மாறிப் போன
இருளொன்று
என் கண்களின் வெண்ணிறத்தில்
கருமை பூசுகிறது
உள்நாக்கில் அரவமின்றி
நாகமொன்று படமெடுக்கிறது
எதிர் நிற்கும் என் நிழலின்
உச்சி முதல் பாதம் வரை
கூரிய பல் கொண்டு கிழிக்கிறது
கிழிக்க கிழிக்க
என் சதைக் கீறி
வெளி வருகிறது
என்னுள் நீ நட்டு விட்டுப் போன
நாளையின் விதையொன்று
துளிர்க்கும் இலையின்
நுனி தடவியபடி
கடந்த நம் இரவுகளின்
புணர்தலின் ஓசை
மொழி பெயர்ப்பின்றி
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
”நானாய் மாறிப் போன
இருளொன்று
என் கண்களின் வெண்ணிறத்தில்
கருமை பூசுகிறது”
ஆஹா..!
நிரந்தர வலியொன்று
கொஞ்சம் கொஞ்சமாய்
ரத்தம் பாயும் எலும்பினுள்
குடியேறத் தொடங்கியுள்ளது
வலி வலி படிப்பவர் மனதிலேயும் .
Nandri Annamalaiyaan
Nandri Padma
நான் விரும்பியவையும்
எனை விரும்பியவையும் ஆனவை
புது வேஷம் போட்டு நிற்கின்றன..
மாற்றத்தின் ஏமாற்றம்..நன்று!
:).. கதறல் புரிகிறது... வரிகள் அருமை..
ஆகா!
ரொம்ப பிடிச்சிருக்கு அனு.
//நான் விரும்பியவையும்
எனை விரும்பியவையும் ஆனவை
புது வேஷம் போட்டு நிற்கின்றன//
வரிகள் அழகாகவும் ஆழமாகவும் உள்ளது...
Nandri Natpu
eninum Ithuthaan nijam
கிழிக்க கிழிக்க
என் சதைக் கீறி
வெளி வருகிறது
என்னுள் நீ நட்டு விட்டுப் போன
நாளையின் விதையொன்று
நன்றி கலகலப் பிரியா, பா.ரா, சங்கவி
:)
இத்தனை நாள் காத்திருந்ததற்கு நல்ல வரிகளை தந்துள்ளீர்கள் ... அருமை
வலியை வார்த்தைப்படுத்துவது மிக எளிதாக கைகூடியிருக்கிறது இந்த கவிதையில்.. சித்தப்ஸு சொன்னாமாதிரி ‘ஆகா’தான் :)
Very thought provoking!
Expectations make everything...
நன்றி அஷோக், இராஜப்ரியன் :-)
Thanks Ram, Many provoked thoughts lead to this poem.
கவிதையில் உங்கள் ஓசை,நன்றாகவே,கேட்கிறது,தொடர்வோம்..
I love you nga...!! neenga romba nalla kavithai eluthareenga...!
Post a Comment