Friday, January 15, 2010

பிய்ந்து தொங்கும் என் பொம்மை




















அமைதியாய் கழிந்து கொண்டிருக்கிறது
தனிமையின் பொழுதுகள்

விரல் நகங்கள் பூசப்பட்ட சாயத்தின்
சுவடுகளை இழந்து கொண்டிருக்கிறது

நிழல்கள் நிஜங்களாய் எதிரில்
நடனமாடிக்கொண்டிருக்கிறது

மனவறையில் இறுக்கிப் பூட்டப்பட்ட
நினைவுகள் எழும்பிக்கொண்டிருக்கிறது
தளும்பும் காயங்களின் தழும்புகளோடு

துரத்துவதைத் திரும்பிப் பார்க்காமல்
விரைந்து கொண்டிருந்திருக்கிறேன்

புதுப் புது வலிகள்
படிப்பித்திருக்கப் பட்டிருக்கிறது
கட்டாயமாய் 

நான் கேட்காமலே
எனை ஆட்கொண்டிருக்கிறது

ஒரு சோம்பலான மதிய வேளையில்
உனைத் தேடி உன் அறைக்கு
வந்திருந்தேன் வீட்டிற்குத்  தெரியாமல்

நீ இல்லா உன் அறையின்
வெறுமை தாங்காமல் வெளியேறினேன்

வழி காட்டுவதாய்த்தானே சொன்னார்கள்
பின் ஏன் அந்த
இருட்டுக் குடிசையில்
தள்ளினார்கள்

வலிக்கிறது
என் உடல் முழுதும்
உருவம் அருவமாய் படர்ந்திருக்கிறது
ஏதோ ஒன்று

வலி சொன்னாலும் மரத்துப் போன
செவிகள் மடல் வைத்து
மூடிக் கொண்டிருந்திருக்கிறது

கைகள் மட்டும் தங்கள் வேலையை
இயல்பாய் தொடர்ந்திருக்கிறது

ஒரு கை
இல்லாத என் முலை
தேடி அழுத்திவிட்டு
கொண்டிருந்திருக்கிறது

இன்னொரு கை
உறுதியாய் நின்ற 
தன் எழுச்சியை தடவிக்கொண்டபடி
பெருமையுடன்

பிரியாத இடம் பிரித்து
உள் நுழைய எத்தனிக்கும் ஒருவன்

பிரிந்த உதடு வழியே
உயிர் உறிஞ்சியவாறே  ஒருவன்

கடந்த பாதை சுவட்டின் சூடு
ஆறும்முன் மீண்டும் மீண்டும்
காதில் கேட்கிறது
அலறல் சத்தம் மட்டும்

இரவுகளில் தனி ஆவர்த்தனம் ஆடுகிறது
விரல்கள் உடல் வழியே
இன்னும் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு

இன்றும்
அமைதியைத் தான் கழிந்து கொண்டிருக்கிறது
தனிமையின் பொழுதுகள்

 -  இது உண்மையிலேயே உண்மையாய் நடந்த ஒரு சம்பவம்.

20 comments:

Cable சங்கர் said...

பேக் டூ பார்ம்..??

தோழி said...

கேபிள், இந்த வருடத்தின் முதல் போஸ்ட். நன்றி முதல் கருத்துக்கு

அண்ணாமலையான் said...

நல்லாருக்கு வாழ்த்துக்கள்...

குட்டிப்பையா|Kutipaiya said...

வலியையும் வேதனையையும் பிரதிபலிக்கிறது ஒவ்வொரு வரிகளும்..

தோழி said...

நன்றி அண்ணாமலையான், Kutipaiya

:-)

ப்ரியமுடன் வசந்த் said...

கவிஞர்கள் நீங்கள் எழுதுவதை வாசிப்பதோடு எங்கள் வேலை முடிந்தது...

பா.ராஜாராம் said...

உண்மையாகவே இருக்கலாம்..

இன்னும் பூடகமாய் சொல்லி இருக்கலாம்.

மஞ்சள் பத்திரிக்கைக்கிணையான வர்ணனைகள் சொல்ல நினைத்ததை திசை திருப்புகிறது.மன்னியுங்கள்.எதிர் பார்க்கவே இல்லை.

தோழி said...

அன்புள்ள ராஜாராம்

உங்கள் கருத்துக்கு நன்றி. எனினும் இது உண்மையில் நடந்த சம்பவமாக இருப்பதினால் அதை அப்படியே பதிவு செய்ய நினைத்தேன். இதற்கு மாற்று வார்த்தைகள் தேட தோன்றவில்லை. இனி வரும் பதிவுகளில் சற்று மாற்றி எழுத முயற்சிக்கிறேன்.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்ல வரிகள். இதைவிட பூடகமாய்ச் சொன்னால் பல பேருக்கு என்ன சொல்கிறீர்கள் என்றே புரியாது போய் விடும் வாய்ப்புள்ளது. எனவே சரிதான் (என்னைப் பொறுத்தவரை).பாராட்டுகள்.

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

கவிதை நன்றாக வந்திருக்கிறது என்பதை உணர்வதை விட வலி அதிகம் தெரிகிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால் தீவிரம் மாறுபடலாம் எனினும் கவிதையின் அர்த்தம் மாறுபடாது. அடுத்த முறை கொஞ்சம் மாற்றி எழுதுவது என்ன கலாச்சார காவல் உணர்வா?

பா.ராஜாராம் said...

thanks!..u may understand.

ராஜ சேகர் said...

தோழி, இத்துணை நாட்களாய் உங்கள் கவிதைகளில் இருந்து வந்த வலி இப்போது அடுத்த கட்டத்திற்கு போய் விட்டது. வலியை வார்த்தைகளால் உணர வைக்க தெரிந்த உங்களுக்கு எப்போது வார்த்தை பஞ்சம் ஏற்பட்டது? இது உங்களுக்கு ஏற்ற பாணி அல்ல.. மற்றபடி உங்கள் கவிதை வழக்கம் போல ஆண்களை நோக்கி மற்றும் ஒருசாட்டையடி

Sakthi said...

happy pongal

கமலேஷ் said...

தெளிவான குரலில் மிகவும் நன்றாக இருக்கிறது...வாழ்த்துக்கள்...

இராஜ ப்ரியன் said...

நல்ல வரிகள் .......

Jerry Eshananda said...

படித்தேன்,சிலிர்த்தேன் .அசாதாரண வரிகள், வலியும் கூட,.புத்தாண்டு,மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள் அனு.

Ashok D said...

வலியை பகிர்ந்துகொள்ளுதல் நலமே, நல்லாயிருந்ததுங்க

லெமூரியன்... said...

நெம்ப பீல் பண்ணிறுக்கீங்க்லே...!
பேசாம நம்ம கட்சில சேர்ந்துருங்க(சிவ பானம்)...
வலியெல்லாம் சிட்டு குருவி மாதிரி பறந்து போயிரும்...!
தனிமையின் வலி போக்கும் வலி நிவாரணி அது...!

:-) :-) :-)........

இயல்பாய் இருக்கறதுதான் ஒரு கவிதையின் உச்சகட்ட வெற்றி...

இது இயல்பாதான் இருக்கு...

வார்த்தை பஞ்சம்....மஞ்சள் சிந்தனை என்பதெல்லாம் பார்வைகளை பொருத்தது...

இதுல compromise பண்ணனும்னு ஏன் நினைக்கிறீங்க...!

அப்டி அனு வேண்டாம்...!
இந்த புள்ளதான் அழகா இருக்கு..!

:-) :-)

ராகவன் said...

அன்பு தோழி,

நல்லாயிருந்தது கவிதை... எனக்கு மஞ்சள் பத்திரிக்கையின் வர்ணம் ஏதும் தெரியவில்லை பாரா சொன்னது போல.

அன்புடன்
ராகவன்

வெள்ளிநிலா said...

did you read my blog mam? if you have intersted pls let me know your postal address to vellinila.blogspot.com thanking you !