Tuesday, December 8, 2009
நிழலாகிப் போன அவள் - உரையாடல் கவிதைப் போட்டிக்காக
பகல்களின் மீதான
நடுக்கம் இன்றும்
குறையவில்லை அவளுக்கு
இரவுகளில் மட்டுமே
தன் கை விரல்களை தானே
பார்க்கிறாள் அவள்
இருட்டு அறைகளுக்குள்
தன்னைத் தானே பூட்டிக் கொள்கிறாள்
கண்ணாடியில் கூட
தன் பிம்பம் தெரிந்து விடாத படிக்கு
மேலே மேலே சுற்றப்பட்ட
இரவு ஆடைகளில் மட்டுமே
அந்த அறைகளுக்கும்
வலம் வருகிறாள்
அவனால் அடிக்கடி
கசக்கப்பட்ட தன்
சிறு வயது ஆடைகளை
கால்களில் கட்டி வைத்துள்ளாள்
ஒவ்வொரு முறையும்
அவசரம் அவசரமாக அவனால்
தரையில் விரிக்கப்பட்டு
அதனையும் மீறி
சிந்தியதைத் துடைத்து
நனைந்து நனைந்து
நிறம் மாறிப் போன
அவளது உள் பாவாடைகள்
அந்த அறை சட்டங்களில்
இன்றும் கிழிந்து தொங்குகின்றன
ஏதாவது உடையில் இருந்து
அவனால் கருவாக்கப்பட்ட
ஏதோ ஒன்று வெளி வந்துவிடும் என்ற
பதட்டம் அவள் கண்களில்
தெரிந்து கொண்டுதான் இருக்கிறது
உடைகளை சதா நேரமும்
உதறிய படியே நடக்கிறாள்
சிதறுபவைகளை
பிய்ந்து போன செருப்புகளால்
மிதித்து அழிக்கிறாள்
அழித்த படி நடந்து கொண்டே
இருக்கிறாள்
நடந்த படியே உண்கிறாள்
நடந்த படியே தூங்குகிறாள்
நடந்த படியே வாழ்கிறாள்
படுப்பதின் மீதான பயம்
இன்னும் போக வில்லை
அவளுக்கு
Subscribe to:
Post Comments (Atom)
54 comments:
A very good initiative you have started from your side.
Hats off to you Thozhi..
நல்லா இருக்கு அணு...!
ஒரு வித அதிர்விநூடாகவே பயணிக்கறது உங்களது ஒவ்வொரு பதிவும்...!
ஒரு பெண்ணின் உணர்வுகளை அப்படியே அழகான வார்த்தைகளால் கவிதையாக்கி இருக்கிறீர்கள் தோழி.
பாராட்டுக்கள்.
:(((((
வேதனை...
நல்லா இருக்கு...........
அதிரவைக்கும் நிழல். படிக்கும்போதே இனம்புறியாத பயம் நம்மையும் தொற்றுகிறது. அருமை தோழி
இன்னும் அந்த நடுக்கம் மனதிற்குள் நிழலாக இரத்தம் உறைந்த படிமங்களோடு.வலியின் உச்சம் கவிதை தோழி.
தோழி...
இது எங்கோ.. நடக்கின்ற.. நடந்த.. நடக்கும் பதிவு...
உணர்வு கொப்பளிக்கின்றது...
யப்பா ... கடைசி வரிகளில் மனம் அதிர்வதேன்னவோ உண்மை தோழி !
வெற்றி பெற வாழ்த்துக்கள் !
படித்து முடித்து வெகுநேரம் ஆனபின்னும், அந்த வலியும் வேதனையும் மனதிற்குள்ளிருந்து வெளியே போக மறுக்கிறது.
படுப்பதின் மீதான பயம்
இன்னும் போக வில்லை
அவளுக்கு //
நல்ல கவிதை கடைசிவரியில்தான் ஆரம்பிக்க வேண்டும், சரிதான்.
இது நல்ல கவிதைதான், வெற்றிபெற வாழ்த்துகள் அனு.
ஒரு குளம், ஒரு கல் சில தண்ணீர் வளையங்கள்
நண்பர்கள் அனைவருக்கும் பெரிய பெரிய நன்றிகள்.
நல்ல கவிதை, வாழ்த்துகள்.
நல்லா இருக்கு .. போட்டியிலே வெற்றி பெற வாழ்த்துக்கள்
nalla irukku... vettri pera vazhthukkal.. :)
சுருக்குனு இடது பக்கம் ஊசியால குத்துனமாதிரி இருக்கு :-(
வெற்றி பெற வாழ்த்துக்கள்
//
படுப்பதின் மீதான பயம்
இன்னும் போக வில்லை
அவளுக்கு
//
வாசிப்பின் போதான மிரட்சி இன்னும் போக வில்லை எனக்கு ...
மிக அருமை தோழி !
வாழ்த்துக்கள்.
நல்லாவே அனுகியிருக்கிங்க.. வாழ்த்துகள்
ரொம்ப நன்றிங்க எல்லாருக்கும். கமெண்ட் போட்டு இருக்கிற நிறைய பேர் போட்டில பங்கெடுதுக்கறீங்க. எல்லாருக்கும் வாழ்த்துக்கள்
நிறைய பேர் இப்போதான் முதல் தடவை வரீங்க என் ப்ளாக் பக்கம். ரொம்ப சந்தோசம். அடிக்கடி வாங்க
ஏதாவது உடையில் இருந்து
அவனால் கருவாக்கப்பட்ட
ஏதோ ஒன்று வெளி வந்துவிடும் என்ற
பதட்டம் அவள் கண்களில்
தெரிந்து கொண்டுதான் இருக்கிறது//
கொடுப்பதன்
நோக்கம் புரியாமல்
எடுப்பவன் எச்சங்களில்
உறைந்திருக்கின்றது
வாழ்வின் பயங்கள்...
நல்லா வந்திருக்குங்க
வாழ்த்துக்கள்..
good one..
நான் படித்த கவிதைகளில் என்னை அதிர வைத்த கவிதை இதுதான் தோழி
இன்னும் என் மிரட்சி குறையவில்லை
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
இன்னொரு பாதிப்பு ஏற்படுத்தும் பதிவு - மிக அருமையான - அந்த வலியை தத்ரூபமாக பிரதிபலிக்கின்ற வரிகள்..
நடுவர்களையும் இவ்வரிகள் பாதித்து
வெற்றி பெற வாழ்த்துக்கள் அனு..
சூப்பர்.
கவிதை மிகவும் அழகா இருக்கிறது...
வெற்றி பெற வாழ்த்துக்கள்...
கவிதை மிக அருமை ..
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்களோடு
விஷ்ணு ..
படிக்கும்போதே அந்த நடுக்கத்தை உணரமுடிக்றதுங்க...
வாழ்த்துக்கள்
வெற்றி பெறும் அனு.அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!
உங்களின் தனித்த முத்திரை,இதிலும்!
எழுதும்போது இவ்வளவு பேர் பாராட்டுவீங்கன்னு நெனச்சுக்கூட பாக்கலை. ஆனா இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு. நிச்சயம் நிறைய எழுதனும்ன்ற ஆர்வத்த கொடுக்குது உங்க பாராட்டுக்கள். ரொம்பநன்றி.
ரொம்ப அதிர்ச்சியை கொடுக்கிரதுங்க இந்த கவிதை.
-வித்யா
யப்பா... இன்னொரு முறை படிக்கக் கூட பயம் தருகிரதுங்க.
நிச்சயம் வெற்றி பெரும் பட்டியலில் இந்தக் கவிதை இடம் பெரும். வாழ்த்துக்கள் தோழி.
-வித்யா
வெற்றி பெற வாழ்த்துக்கள்.
கவிதையும் கருத்தும் ரொம்ப வித்யாசம்ங்க
ச்சே... மனச என்னவோ பண்ணுது...
வெற்றி பெற வாழ்த்துகள்!
யார் மீது கோபப்படுவது...?
இனமனைத்தும் துண்டாக வெட்ட ஒரு வெறி வருகிறது...
பரிசு இதன் நோக்கம் இல்லை..உறுதியாய் கிடைக்கும் என்றாலும்..மனதை உலுக்கி தூக்கம் கலைத்ததே பெரிய பரிசு..நிறைய எழுதுங்கள்..
வாழ்த்துக்களுடன்
பத்மா
நன்றிகளுடன் அனு. இது ஒவ்வொரு நிமிடமும் எங்கோ எந்த இளம் தளிருக்கோ நடக்கும் விஷயம். அதன் மிரட்சி தீராமல் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
happy pongal
நன்றி நண்பர்களே
பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்!
அன்புடன்
உழவன்
வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் அனு! :-)
//வெற்றி பெறும் அனு.அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!
உங்களின் தனித்த முத்திரை,இதிலும்! //
நன்றி பா.ரா.
வாழ்த்துக்கள் அனு
:)
வாழ்த்துக்கள் தோழி.. மேலும் பல விருதுகளும் பரிசுகளும் உங்கள் வசமாகட்டும்.. தொடருங்கள் உங்கள் கவிப்பயணத்தை.. !! :)
வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகளுங்க :-)
வாழ்த்துகள் தோழி !
வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் தோழி!
-ப்ரியமுடன்
சேரல்
வாழ்த்துக்கள் தோழி,,,
வாழ்த்துக்கள் தோழியரே!
வாழ்த்துக்கள்.
congrats thozhi
வெற்றிபெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்....
வாழ்த்திய அனைவருக்கும் நன்றி!!
Post a Comment