Thursday, December 31, 2009

வலி சுமக்கும் வழி















வலி நிறைந்த வழிதனைக்
கடந்து வந்துள்ளேன்
கடக்கும் தூரம் என் முன் நீள்கிறது

கடந்த பாதையை உற்று நோக்கின்
மேடு பள்ளங்கள்
என் முகத்தின் சாடையை
ஒத்திருக்கின்றன

பயணத்தின் நடுவே
கண்ணில் தெரியும் மரங்கள்
எதுவும் மரங்களாய் இல்லை
என்னுடன் வாழ்ந்து
என்னுள் மரித்துப் போன நீயாய்
நிற்கின்றன

வாழ்வின் ஆரம்பப் புள்ளியில்
நிற்பதாய் நினைத்திருந்தேன்
பல நேரங்களில்
முடியும் நேரம் என் வீட்டு கடிகாரத்தில்
என்னை விட வேகமாய் ஓடுகின்றது

முகமெங்கும் ஒவ்வொரு நாளும்
சுருக்கங்கள் பாவத்தின் எண்ணிக்கையாய்

சோர்வின் அழுத்தம்
முதுகில் அழுக்காய்
எட்டாத தூரத்தில்  உறுத்துகிறது

மறந்து போகும் நிழலாய்
திடீரென என் முன் நீள்கின்றன
கனவுகள்

இரவுகள் மிகுந்த அச்சத்துக்கிடையில்
கழிகின்றன
முகம் போர்த்தும் போர்வை
இறுதி நெருப்பாய் கொதிக்கிறது

எனை நானே சுமக்கும்
பாடையாய் மாலை சூடி
ஊரெங்கும் ஊர்வலம் போகிறேன்

விடியும் ஒவ்வொரு காலையும்
போக்கியாக வேண்டிய
இன்றைய மணித்துளிகளை
கனமாய் ஏந்தி காத்திருக்கிறது

16 comments:

ராஜ சேகர் said...

Excellent One!! Good you're showing some difference from your usual ones. Keep it up Natpu..!

குட்டிப்பையா|Kutipaiya said...

nice anu - different from ur usual ones!

நேசமித்ரன் said...

மிக அணுக்கமான மொழியில் பேசும் இந்தக் கவிதையின் வலி மனசை பிசைகிறது

வலி பிடிக்கும்கவிதை இது

அண்ணாமலையான் said...

நல்லாருக்கு...

இராஜ ப்ரியன் said...

நல்லாயிருக்கு .......

Cable சங்கர் said...

/விடியும் ஒவ்வொரு காலையும்
போக்கியாக வேண்டிய
இன்றைய மணித்துளிகளை
கனமாய் ஏந்தி காத்திருக்கிறது
//

நிதர்சனம்

sathishsangkavi.blogspot.com said...

//விடியும் ஒவ்வொரு காலையும்
போக்கியாக வேண்டிய
இன்றைய மணித்துளிகளை
கனமாய் ஏந்தி காத்திருக்கிறது //

அழகான வரிகள்... படித்து முடித்தும் நெஞ்சில் நிற்கிறது....

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி.....

ஸ்ரீநி said...

valiniraindha padhivu

லெமூரியன்... said...

\\முகமெங்கும் ஒவ்வொரு நாளும்
சுருக்கங்கள் பாவத்தின் எண்ணிக்கையாய்.........///

பாவி...????
அவ்வளவு சுருக்கங்கள் தெரியலியே....
பள பளனுதானே இருக்கு உங்க முகம்..!
:-) :-) :-)

நல்லா இருக்கு அனு...

கடந்து போனதா நெனைக்கும் போது
ஒரு வெறுமை வந்து ஒட்டிக்கும்...
அது போலவே இந்த கவிதையை படிச்சா பிறகு..
மனசுக்குள்ள ஒரு வெறுமை குடிகொள்கிறது..!
:-(

நேசமித்ரன் said...

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

amma said...

Thats Superp One For The Old.

Jerry Eshananda said...

pain....not enough,try something.

Mohan R said...

Romba nalla irukku... Kadaisi varigal valiyin ucham

நிலாரசிகன் said...

//வாழ்வின் ஆரம்பப் புள்ளியில்
நிற்பதாய் நினைத்திருந்தேன்
பல நேரங்களில்
முடியும் நேரம் என் வீட்டு கடிகாரத்தில்
என்னை விட வேகமாய் ஓடுகின்றது//

ரசித்த வரிகள்.வாழ்த்துகள்.

பா.ராஜாராம் said...

இது ரொம்ப பிடிச்சிருக்கு.

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

”விடியும் ஒவ்வொரு காலையும்
போக்கியாக வேண்டிய
இன்றைய மணித்துளிகளை” - இது நன்றாக வந்துள்ளது.