Friday, December 4, 2009
துளிர்க்கும் இலை
உதிரும் இலையும் மறுபடி துளிர்க்கும்
வேறொரு பேரில்
வேறொரு வடிவத்தில்
உதிர்ந்ததாய்த்தான் நினைத்திருந்தேன்
உன் அரவணைப்பில்
உள்ளங்கால் சிலிர்க்கும் வரை
என் கண் பார்த்துக் காதல்
சொல்லிவிட்டு
கை கோர்த்துக் காத்திருந்தாய்
விரல்களின் அழுத்தம்
சொல்லித் தந்தது
நமக்கான என் காதலை
ஒரு பேருந்து பயணத்தில்
தோள் சாய்த்து
காதோரமாய் கனவைச்
சொல்லச் சொன்னாய்
சுற்றி நின்ற உலகம் மறந்து
நம் குழந்தைக்கான பேர் சூட்டினோம்
உன் மூச்சுக் காற்று
பட்டு தாண்டி செல்லும் போதெல்லாம்
அடி வயிற்றில் ஆசையாய்
ஒரு அவஸ்தை
இதழ் ஸ்பரிசம்
ஒவ்வொரு இதழாய்
பிரித்து மகரந்தம்
சேமிக்க கற்றுத் தருகிறது
உனக்காக
இன்னும் நிறைய நிறைய
சேமித்து வைத்திருக்கிறேன்
சாவி தொலைத்து
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
இன்னும் நிறைய நிறைய
சேமித்து வைத்திருக்கிறேன்
சாவி தொலைத்து
அனு. நல்ல இருக்குங்க... உரையாடல்?
\\உதிரும் இலையும் மறுபடி துளிர்க்கும்
வேறொரு பேரில்
வேறொரு வடிவத்தில்...//
ரசித்து கொண்டிருக்கும் வரிகள்...!
:-) :-)
\\இன்னும் நிறைய நிறைய
சேமித்து வைத்திருக்கிறேன்
சாவி தொலைத்து...//
நல்லா இருக்குங்க...!
//என் கண் பார்த்துக் காதல்
சொல்லிவிட்டு
கை கோர்த்துக் காத்திருந்தாய்
விரல்களின் அழுத்தம்
சொல்லித் தந்தது
நமக்கான என் காதலை//
ரசனையான வரிகள்.மிக அருமை தோழி.
nice.
Ethuvum solla mudiyala
THE BEST
உதிர்ந்ததாய்த்தான் நினைத்திருந்தேன்
உன் அரவணைப்பில்
உள்ளங்கால் சிலிர்க்கும் வரை
Nice feel
//இதழ் ஸ்பரிசம்
ஒவ்வொரு இதழாய்
பிரித்து மகரந்தம்
சேமிக்க கற்றுத் தருகிறது
உனக்காக//
எப்படிங்க உங்களாள மட்டும்.........
கலக்ககறீங்க போங்க................
//சாவி தொலைத்து//
க்ளாஸ் தோழி. கவிதை ரொம்ப நல்லா இருக்கு.
நன்றி முரளி, லெமூரியன் ரமேஷ், பூங்குன்றன்
நன்றி ராஜாராம், இவன், சங்கவி, நவாஸ்
அருமை அருமை !!
udhirum ovoru ilaiyum, ilaiyudhir kaalam alla,puthampudhu naalin pudhiya vidiyale,saridhanungala Anu?
Post a Comment