Tuesday, December 15, 2009

காசி - எரியூட்டுபவனின் பயணம்















சவங்கள் சிவமாகும் நதியின்
கரையில் நிற்கிறேன்
எரியூட்டப்படும் உடல்களின்
கதகதப்பு வேண்டி

கரையோர இடிபாடுகள் உள்ளேதான்
எனக்கான உணவு சமைத்து
ஆறிக்கொண்டிருக்கிறது

கையில் தடி கொண்டு காத்திருக்கிறேன்
வெப்பம் தாளாமல் எழுந்து
நடனமாடும் உயிரற்றவைகளின்
உடல்கள் அடித்து
உலையில் தள்ள

நிலவு வளரும் ஒரு நடு நிசியின்
நிசப்தத்தில்
மூழ்கடிக்கப்பட்ட பிணங்கள்
ஒவ்வொன்றாய் எழுந்து வரத் தொடங்கின
என் தனிமையை பகிர்ந்து கொள்ள

நாங்கள் பேசத் தொடங்கினோம்
ஒவ்வொருவராய்
தங்கள் வாழ்க்கையை
தங்கள் ஏமாற்றத்தை
வெற்றியை நினைத்த தோல்வியை
பகிர்ந்து கொண்டோம்

கடந்து செல்லும் பிணங்களை
வேடிக்கை பார்த்தபடி
பேசிக் கொண்டிருந்தோம்
தோள் கை போட்டு

எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டேன்
கண்ணுக்கு எட்டாத எல்லையின்
பின்புறம் ஒரு உலகம்
இருப்பதாய்ச் சொன்னார்கள்

கைப் பிடித்து அழைத்து செல்வதை
உறுதி கூறினார்கள்
அழைப்பினூடே அவர்களுடன்
நடக்கத் தொடங்கினேன்
 நதி மேல்

காலைக்குள் திரும்பி வந்து விட வேண்டிய
அவசரம் இருந்தும்
நடந்து கொண்டிருக்கிறேன்
காலைக்குள் திரும்பி வராவிடில்
என் தடி எனை அடித்து
உலையில் தள்ளி விடும்

ஒவ்வொரு இரவும் இப்படித்தான்
நடைப்பயணம் போய்க் கொண்டிருக்கிறேன்
என் தடியும் அமைதியாய்
அருகில் அமர்ந்திருக்கிறது
எனக்கான உடல்களும்
நான் எரியூட்ட காத்திருக்கின்றன

18 comments:

தம்பி... said...

அருமை.. அருமை...

நேசமித்ரன் said...

வாவ்!

சரியான கலவை ரொம்ப பிடிச்சு இருக்கு அனு

அன்பேசிவம் said...

கொஞ்சம் ஃபீலிங் கம்மி, தொடருங்கள்

S.A. நவாஸுதீன் said...

நல்லா இருக்கு தோழி

இளவட்டம் said...

Class....:-)))

Jerry Eshananda said...

ஜுவாலை தெறிக்கிறது.

sathishsangkavi.blogspot.com said...

அழகான கற்பனை............
நல்ல வரிகள்.............

shortfilmindia.com said...

இண்டெப்தா.. இன்னும் கொஞ்சம்னு எக்ஸ்டெண்ட் பண்ணிட்டீங்களோ..?

கேபிள் சங்கர்

பா.ராஜாராம் said...

ரொம்ப பிடிச்சிருக்கு அனு.

உயரமாகி கொண்டே இருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள் மக்கா!

லெமூரியன்... said...

நல்லா இருக்கு அனு...

இன்னும் ஆழமா கொஞ்சம் அதிரடியா சொல்லிருக்கலாமோனு
தோணுது...!

ஸ்ரீநி said...

என்னன்னு சரியா சொல்லத் தெரியல
என்னமோ ஒரு ஈர்ப்பு .. அனால் இன்னும் ஏதோ ஒரு
ஒரு விஷயத்தை உங்கள் கவிதையில் தேடுகிறேன் ......கிடைக்கலை

அண்ணாமலையான் said...

இந்தாங்க புடிங்க என்னோட பூங்கொத்து..

ஹேமா said...

தோழி,நிஜம் நிகழ்ச்சியில் இந்த நிகழ்வைப் பார்த்து அதிர்ந்துவிட்டேன்.
இப்படியெல்லாம் நம்பிக்கையா ?இது எந்த வகையில் சரியாகும்.இன்னும் அதே கேள்வி எனக்குள்.அதே கவிதையைப் படிக்கையில் !

சே.ராஜப்ரியன் said...

இது கவித .........................

இராஜ ப்ரியன் said...

இது கவித .........................

மணிஜி said...

சூப்பர்ப்

ராஜ சேகர் said...

ஓம் சிவோஹம்.. ஓம் சிவோஹம்! நீங்க அணு ராதாவா இல்ல அகோரி ராதாவா??

ஆனாலும் "சவங்கள் சிவமாகும் நதியின் கரையில்" கங்கையை பற்றி சொல்ல இதை விட பொருத்தமான ஒரு வாசகம் கிடைக்காது

தோழி said...

Many Many thanks for all the comments.