Wednesday, December 16, 2009

நாமும் அவனும்
















 




சபிக்கப்பட்ட பழங்களின் மர நிழலில்
கால் நீட்டி அமர்ந்திருந்தோம்
ஒருவரையொருவர் அணைத்தபடி
வெற்று உடலாய்
மௌனமாய்
நமைப் பற்றி ஏதும் அறியாமல்
எந்த கேள்வியும் எழாமல்

தூர நின்று பார்த்த ஆதாம்
வேகமாய் அருகில் வந்தான்..
தன் ஆண்மையை நம்முள் பதிவு செய்வதற்காய்

அவன் குறி
நேற்றுப் பிறந்ததைப் போல சுருங்கிப் போனது
நம்மின் வெப்ப மூச்சில்....

 ---- 2008 -ல் நான் எழுதிய கவிதை. என்னாலும் எழுத முடியும் என்ற நம்பிக்கை கொடுத்த  கவிதை.

12 comments:

sathishsangkavi.blogspot.com said...

நல்லாயிருக்குங்க.............

அண்ணாமலையான் said...

"நமைப் பற்றி ஏதும் அறியாமல்
எந்த கேள்வியும் எழாமல்" இப்படித்தான் பலர் நம் வாழ்க்கையில் நுழைகிறார்கள்.. எங்களுக்கும் நம்பிக்கை வந்துடுச்சி.. ம்ம் ... ஆரம்பிக்கட்டும்..

தோழி said...

Thanks Sangkavi.

:) Thanks Annamalaiyan.

லெமூரியன்... said...

தலைப்பை மட்டுமே பாத்துட்டு கவிதைகுண்டான படத்தை பாக்காம விட்டுட்டேன்.!
:-) :-)
கவிதை அருமை...

\\அவன் குறி
நேற்றுப் பிறந்ததைப் போல சுருங்கிப் போனது
நம்மின் வெப்ப மூச்சில்.......//

பெண்களை சக்தின்னு இதனால்தான் சொல்றாங்களோ??
:-) :-) :-)

அன்பேசிவம் said...

நாங்கல்லாம் காதல் தோல்வி கவிஜர்கள் ஜாதி,

சூரியனான
நான் பார்க்காததால்தான் சூரியகாந்தியான
நீ
வாடினாயோ?
இப்டி ஆரம்பிச்சோம், :-)

நீங்க ஆரம்பத்திலிருந்தே இப்படித்தானா? கலக்குங்க...கலக்குங்க...
:-)
முதல் கவிதையே, அனுபவப்படிப்பின்றி, வெற்றுகற்பனை வடித்து எழுதியிருக்கும் தோழிக்கு வாழ்த்துக்கள்

இராஜ ப்ரியன் said...

உங்களின் ஒவ்வொரு வரியும் ....................... !

Cable சங்கர் said...

உங்களை ரெபர் பண்ணினது தப்பில்லை..:)

ப்ரியமுடன் வசந்த் said...

mm..கற்பனைக்கவிதையென்றாலும் நல்லா எழுதியிருக்கீங்க...!

ஹேமா said...

நம்பிக்கை வீண்போகவில்லை.
இன்னும் தொடரும்.தொடரட்டும் தோழி.அர்த்தம் தேடும் கவிதை.

Jerry Eshananda said...

தோழி வணக்கம்,அடுத்த பத்தாண்டுகளை [2010 onwards] தமிழ் இலக்கிய உலகை ஆட்சி செய்வீர்கள் என்பது என் நம்பிக்கை,செய்ய வேண்டும் என்பது என் ஆசை.

பா.ராஜாராம் said...

ரொம்ப
பிடிச்சிருக்கு...

ஒரு விருது இருக்கு மக்கா.நம் தளத்தில்.

நேரம் வாய்க்கிறபோது ஒரு நடை..

பூங்குன்றன்.வே said...

ரொம்ப பிடிச்சிருக்கு கவிதை !!!