Friday, December 11, 2009

தேநீர் அருந்தும் நினைவுகள்

இறுக்கிப் பிடித்த கைகளின்
விரல் வழியே
வழிந்து சென்றுவிடுகிறாய்
ஒவ்வொரு அணைப்பின் இறுதியிலும்

அடர்ந்த காட்டின்
நடுவே பற்றி எரிகிறது
உனக்காய் நான் பதுக்கி வைத்த
ஒற்றைக் கதவு

விரையும் வாகனங்கள் நிறைந்த
பாதையில் ஒவ்வொரு நிறுத்தத்திலும்
உனக்காய் ஒரு
முத்தத்தை விட்டுச் செல்கிறேன்

அவ்வப்போது
உன் வாகனத்தையோ
உன் ஆடையையோ உதறிப் பார்த்துக்கொள்
எங்காவது ஒட்டிக் கொண்டிருக்கும்
என் விடியலின் மிச்சங்கள்

நீ திரும்பும் வழிதனில்
நிறைய காற்றிருப்பதாய்
தலை கேசம் சரி செய்துகொள்கிறாய்
உன்னைத் தொடரும் என் சுவாசம்
உன்னை அறியாமல் தான்
பின் தொடரும்
நீ அறியாமல் உன் மேல் பொழியும்

மாலை நேரங்கள்
தங்கள் நிறம் இழந்து
ஊதாநிறப் பூ பூக்கின்றன
முழங்கால்கள் துவண்டு போகின்றன
நீ வந்து அழைப்பு மணி அழுத்தும் நேரம்

இதயம் சற்றே நின்று
எனைத் தட்டி பார்க்கிறது
உள்ளுக்குள்
ஒரு ஆணி தானே கழண்டு விடுகிறது

விரல் சொடக்கெடுத்து
கனவுகள் பகிர்கிறோம்
தொடர்ந்து வந்த
காற்றின் கரங்களை கட்டி வைக்கிறோம்
நினைவுகளை விலாசம் மாற்றி
அனுப்பி வைக்கிறோம்
கண்களுக்குள் காதலை
காமம் பற்றி எரிதலோடு சேர்த்து
படம் பிடித்தோம்

ஒருவருக்கு ஒருவர்
பாடம் எடுத்தோம்
பாடம் படித்தோம்

விடியும் வேளை உடை மாற்றி
உடை மாற்றினோம்
மெல்லிய சிரிப்போடு
மறுபடியும் மாற்றினோம்

வாழ்ந்து கொண்டே இருந்தோம்
விருட்சமாய் மாறிப் போனது
நம் காதல் நாமறியாமலே

ஒரு மழைக்கால நீண்ட கருஞ்சாலையில்
தனித்திருந்து  தேநீர் அருந்தும்
என்னிடம் மிச்சம் இருப்பது
சாலை கழுவிய
மழையின் சாரல்கள் மட்டுமே
விருட்சத்தின் விழுதுகள் பற்றி
தொங்கி கொண்டிருக்கிறது
கடந்தவையின் விதைகள்

18 comments:

chandru / RVC said...

ரொம்ப நல்லா இருக்குங்க.

அன்பேசிவம் said...

அனு எஸ்.ராவை வாசித்திருக்கிறீர்களோ இல்லையோ தெரியாது? அவர் கவிதை எழுதினால் இப்படித்தான் இருக்கும்.

நல்ல கவிதை, கடைசிவரியில் ஆரம்பிக்கும், இங்கே கடைசி பாராவில்... :-)

வாழ்த்துக்கள்.

பூங்குன்றன்.வே said...

எந்த வரிகளை பிடித்து இருக்கு என்று சொல்லமுடியவில்லை.மொத்த கவிதையுமே ரொம்ப அழகா இருக்கு.

குட்டிப்பையா|Kutipaiya said...

காதல் வழிகிறது ஒவ்வொரு வரிகளிலும்.. அருமை..

sathishsangkavi.blogspot.com said...

//விரல் சொடக்கெடுத்து
கனவுகள் பகிர்கிறோம்
தொடர்ந்து வந்த
காற்றின் கரங்களை கட்டி வைக்கிறோம்
நினைவுகளை விலாசம் மாற்றி
அனுப்பி வைக்கிறோம்
கண்களுக்குள் காதலை
காமம் பற்றி எரிதலோடு சேர்த்து
படம் பிடித்தோம்//

வார்த்தைகளை அழகாக கையாண்டு இருக்கிறீர்கள்.........

ஹேமா said...

அழகான காதல் கவிதை.வரிகள் கோர்த்த விதம் அருமை தோழி.

லெமூரியன்... said...

\\விருட்சத்தின் விழுதுகள் பற்றி
தொங்கி கொண்டிருக்கிறது
கடந்தவையின் விதைகள்......//

ரொம்ப ரசிச்ச வரிகள் இது.....! :-) :-)

\\நீ திரும்பும் வழிதனில்
நிறைய காற்றிருப்பதாய்
தலை கேசம் சரி செய்துகொள்கிறாய்
உன்னைத் தொடரும் என் சுவாசம்
உன்னை அறியாமல் தான்
பின் தொடரும்
நீ அறியாமல் உன் மேல் பொழியும்.........//

:-) :-) :-)

நல்லா இருக்கு அனு...!

:-) :-)

வழக்கத்துக்கு மாறா கொஞ்சம் அதிர்வும் நெரிய்யா காதலும்...! :-) :-)

Cable சங்கர் said...

அனு... கிட்டத்தட்ட வென்றுவிட்டீர்கள்...

S.A. நவாஸுதீன் said...

எந்த வரியை பாராட்டுவதென்றே தெரியவில்லை தோழி.

நினைவுகள் நினைவில் நிற்கும்.

கனிமொழி said...

நல்லா இருக்குங்க.

இராஜ ப்ரியன் said...

முதல் முறைதான் வந்து படித்தேன்
என் நாக்கு இதுவரையில் சுவைத்ததில்லை இப்படி ஒருத்"தேன்"
தூக்கம் இன்றிரவுமட்டும்தான் போகுமா
இல்லை அடுத்த பதிவை படித்துவிட்டு நெடுநாள் இன்னும் நீளுமா .......... ?

உலகமே ரசிக்கும் ஒற்றைநிலவு
உணர்ச்சிகளை சுவாசிக்கின்ற நல்ல தரவு
நான் இப்படியெல்லாம் கிறுக்கியது என் தவறுதான் என நான் சொல்லமாட்டேன்
அனைத்தும் உளறல் காரணம் உங்கள் வரிகள் ..........................

நீங்கள் அழகிகளுக்கெல்லாம் அழகி,
அற்புதங்களெல்லாம் அற்பம் உங்கள் வரிகளுடன் ஒப்பிடும்பொழுது
அட .................. நான் ரொம்ப உளறேன் .............. எனக்கு என்னமோ ஆயிடுச்சு ..................

இராஜ ப்ரியன் said...

முதல் முறைதான் வந்து படித்தேன்
என் நாக்கு இதுவரையில் சுவைத்ததில்லை இப்படி ஒருத்
"தேன்"
தூக்கம் இன்றிரவுமட்டும்தான் போகுமா
இல்லை அடுத்த பதிவை படித்துவிட்டு நெடுநாள் இன்னும் நீளுமா .......... ?

உலகமே ரசிக்கும் ஒற்றைநிலவு
உணர்ச்சிகளை சுவாசிக்கின்ற நல்ல தரவு
நான் இப்படியெல்லாம் கிறுக்கியது என் தவறுதான் என நான் சொல்லமாட்டேன்
அனைத்தும் உளறல் காரணம் உங்கள் வரிகள் ..........................

நீங்கள் அழகிகளுக்கெல்லாம் அழகி

அண்ணாமலையான் said...

சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

ஸ்ரீநி said...

இனிமேலாவது
ஒரு முறை காதலிப்பேன்
இதற்க்காகவாவது காதலிப்பேன்

thiyaa said...

வாழ்த்துகள் நண்பரே.

மணிஜி said...

மிகச்சிறப்பாக இருக்கிறது தோழி. நாளை வலைச்சரத்தில் அறிமுகம் செய்கிறேன்.

தோழமையுடன்

தண்டோரா

கலகலப்ரியா said...

superb..!