Tuesday, December 8, 2009
ஜன்னலுக்கு வெளியிலான வாழ்க்கை
நீண்ட பெரிய சத்திரத்தின்
இருட்டு மூலையில்
ஏதோ ஒரு சிணுங்கல் ஒலி
இருந்துகொண்டேதான் இருக்கிறது
பெருக்காமல் விட்டுப் போன
ஒரு திரை அரங்கின்
ஏதாவது ஒரு நாற்காலிக்கு
கீழே கசக்கிப் போட்ட
ஈரக் காகிதம் நகர்ந்து
சென்றுவிட வழிதெரியாமல்
வாசமின்றி
வாழ்ந்துகொண்டேதான் இருக்கிறது
அடுத்த நாள் காலை வரை
நீலப் படம் ஓடும்
அந்த தியேட்டரில்
இரவுக்காட்சிக்கு டிக்கெட்
குடுக்கும் அவனின்
மகளையும் அதே போன்றதொரு
படம் பார்த்தவன்தான்
இலவசமாய் கசக்கி
முகர்ந்திருப்பான்
டிக்கெட் வாங்க
பணம் இல்லாமல் போஸ்டர்
பார்த்தவன்
இதையாவது இலவசமாக
பார்த்திருப்பான்
சாலையோரச் சண்டையில்
விலக்கி விடுவதை விட
விலகும் நேரம் தெரியும்
அவளின் ரவிக்கையின் ஈரம்
கதகதப்பாய் இருக்கிறது
சுற்றி நிற்கும் கூட்டத்துக்கு
கூடும் வரைக்
காத்திருந்துவிட்டு
முழு முயங்குதலில்
கல் எறிந்து சந்தோசப்படுகிறார்கள்
துணையின் உச்ச நேரத்தில்
எப்போதும் எழுந்து செல்பவர்கள்
இன்னும் வேடிக்கை பார்ப்பவர்கள்
இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள்
அது
மரணமோ
கற்பழிப்போ
ஆடை அவிழ்ப்போ
கூடலோ அது எதனுடையதாக இருந்தாலும்
தன் ஜன்னலுக்கு வெளியே
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
ஜன்னலுக்கு வெளியேயான உங்கள் பார்வை வேடிக்கை அல்ல.வேடிக்கை பார்ப்பவர்களை வெளிச்சம் போட்டு காட்டும் விளக்காய் உள்ளது..
\\இன்னும் வேடிக்கை பார்ப்பவர்கள்
இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள்
அது
மரணமோ
கற்பழிப்போ
ஆடை அவிழ்ப்போ
கூடலோ அது எதனுடையதாக இருந்தாலும்
தன் ஜன்னலுக்கு வெளியே.......//
பார்த்த விதத்திலும்...பதிந்த வகையிலும் சிறப்பு....
பொதுவாக நம்முடைய அந்தரங்க விஷயங்களை மறைக்க ஆசைபடும் நாம், அடுத்தவரின் அந்தரங்கம் அறிய மிகுந்த ஆவல் கொள்கிறோம்...
ஆறறிவு என்று மார்தட்டும் இனத்தின் அயோக்கிய குணங்களில் இதுவும் ஒன்றோ?????
நல்லா இருக்கு தோழி.
டிக்கெட் கொடுப்பவனின் மகளை ஏன் வேறொருவன் கசக்க வேண்டும்? பிட் பட தியேட்டரில் வேலை செய்ததற்கு தண்டனையா..?அனு
//சாலையோரச் சண்டையில்
விலக்கி விடுவதை விட
விலகும் நேரம் தெரியும்
அவளின் ரவிக்கையின் ஈரம்
கதகதப்பாய் இருக்கிறது
சுற்றி நிற்கும் கூட்டத்துக்கு//
ஜன்னலுக்கு வெளியே........
அழகான, ஆழமான, ஆழுத்தமான கவிதை........
samudhaya paarvai! Miga Arpudham!andha ticket koduppavanin Magal meedhu enna kobam? oruvelai thagappan seivadhu avalukku theriyadhu irundhal.....
கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
டிக்கெட் குடுப்பவனின் மகளும் ஒரு பெண்தானே. எத்தனையோ இரவுகளில் தந்தைக்கு உணவு குடுத்து விட்டு திரும்பிச் செல்பவளாக இருக்கிறாள் அவள். அப்படிப்பட்ட இரவுகளின் ஒரு முகம் இது.அவ்வளவுதான்
எதர்த்தமான நிகழ்வுகளின் பதிவு..
இதெல்லாம் வேடிக்கையல்ல தோழி.வெளியில் நடக்கும் வேஷம் போட்ட அக்கிரமங்கள்.
இதை விட சிறப்பாக சொல்ல முடியுமா? நீண்ட நாட்களுக்கு மனதில் நிற்கும் வரிகள்
its very nice .. End lines made us feel
Post a Comment