ஒவ்வொரு புணர்தலின்
முடிவிலும் உனக்கு திருப்தியா
என்ற கேள்வியோடு ஆடை புனையத்
தொடங்குகிறேன்
என்னின் உச்சம் உணர்ந்ததில்லை
நான்
அதற்கான கேள்வியும் உன்னுள்
வந்ததில்லை
உடை களைதலில் நீ காட்டும்
அவசரம் ஒவ்வொரு வேளையிலும்
ஒரு கேள்வியாக மட்டுமே நின்று போயிருந்தது
இரவுகள் இன்னுமொரு
நரகமாக மாறத் தொடங்கிய
நாட்களின் இறுதியில்
அவன் புதியதாய்
பூக்கத்தொடங்கினான்
என் பாடல்கள் அவனுக்காய்
புது சுவரம் கோர்க்கத் தொடங்கின
என் உடைகளின் நிறம்
அவனுக்குரியதாய் வர்ணம் பூசின
என் படுக்கை விரிப்புகளின்
பூக்கள் புது மணத்துடன்
விரியத்தொடங்கின
மலராத என் வீட்டுத் தோட்டத்தின்
நடுவே நின்று
பூத் தொடுத்தேன்
வாடும் முன் அள்ளியெடுத்து
அவன் அணைப்பதாய்
கனவுகள் கண்டேன்
அவன் என்னை மெதுவாய்
மிக மெதுவாய்
ஸ்வரம் பிரிக்கத் தொடங்குகிறான்
என் விரல்கள் அவன் தொடலுக்காய்
ஏங்கி மருதாணி சாயம்
பூசியது
என் வருகையை அவனுக்கு
அறிவிக்க மட்டுமே
கால்கள் கொலுசணிந்து
நடக்கத் தொடங்கியது
மறுபடியும் விடிந்து விட்டது
என் கனவுக்குள் சென்று
உறங்கத் தொடங்கி விட்டான் அவன்
Thursday, December 3, 2009
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
ஆத்தீ........பட்டையை கிளப்புறீங்க......!
வெளிப் படுத்த முடியா கேள்விகளும் வலிகளும்....
வாரியணைக்கும் கனவுகளே ஆறுதலாக...!
ஆரம்ப வரிகளில்தான் எவ்வளவு நிதர்சன வலி..:((
That was amazing... Very nice use of words... Kanavu kadhalargal nijam aanal valkkai nalla thaan irukkum :(
மௌனம் மெல்ல உடையும்.தாங்க இயலாது அதன் ஜீவிதம்.
மற்றொரு உலுக்கல்!
//என் உடைகளின் நிறம்
அவனுக்குரியதாய் வர்ணம் பூசின
என் படுக்கை விரிப்புகளின்
பூக்கள் புது மணத்துடன்
விரியத்தொடங்கின
மலராத என் வீட்டுத் தோட்டத்தின்
நடுவே நின்று
பூத் தொடுத்தேன்//
வாவ்.............
ஒவ்வொரு வரியும்
பின்னிஎடுத்துட்டீங்க போங்க..............
சுவை கூட்ட வழியுண்டு
குறை தீர்த்து வாழ
வெட்கமும் அசிங்கமும்
படுக்கையறை வெளியே
வீசியபின் காண்பது
முடிவிலா இன்பம்
கனவல்ல நனவேதான்
காண்பதுதான் வாழ்க்கை!
வலியை கூட இவ்வளவு அழகாக எழுத முடியுமா? ஆச்சர்யமாக இருக்கிறது.மிக அருமை.
நன்றி லெமூரியன், சங்கர், இவண்
நன்றி ராஜாராம். உங்களது புத்தகத்திற்கு வாழ்த்துக்கள். ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்
மிக்க நன்றி சங்கவி, தமிழன், பூங்குன்றன்
:)
Post a Comment