Thursday, October 9, 2008

மழையின் நட்பில்

ரோஜாக்கள் பூக்கும் மழைக் காலத்தில்
இருவரும் தனித்திருந்து
பனித்துளி ரசிப்போம்

எனக்கான துளியை நீயும்
உனக்கான துளியை நானும்

முட்களை தாண்டி
இதழ்களை தீண்டும் நாட்கள்

மெல்ல பனியில் மறையும்
இரவில் பெய்த பனித்துளிகள்

மெல்ல காலம் எனும்
கோடையில் காயும்..

கலைந்த எழுத்துகளில் கவிதைகள்
நிலை மாறுகின்றன..
பிரிவின் காயத்தை
காலம் மெல்லத் தின்னும்

மறுபடியும் மேகம் குவியும்
மற்றொரு மழைக் காலத்துக்காக
அந்நாளுக்காக
கையில் குடை பிடித்துக்
காத்திருப்போம் மீண்டும் நனைய

சாயம் போன கவிதைவரிகள்
மறுபடியும் காத்திருக்கும்..
மழை கொண்டுவரும் புதிய நிறத்துக்காக..

நிச்சயம் மழை வரும் நண்பனே
புதிய நிறத்துடன்
புதிய மணத்துடன்
மிக திடமாக

கைகோர்த்து நடப்போம் நட்புடன் கம்பீரமாக

மழை கழுவிய சாலையில்
கைகோர்த்து நடப்போம் நட்புடன் கம்பீரமாக

எல்லா கோடையின்
இறுதியும் ஒரு மழையுடனே முடிகிறது..

எல்லாக் கோடையும் ஒரு மழைக்காக காத்திருக்கிறது.

நமைப் போலவே

4 comments:

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

//''எல்லா கோடையின்
இறுதியும் ஒரு மழையுடனே முடிகிறது..
எல்லாக் கோடையும் ஒரு மழைக்காக காத்திருக்கிறது. நமைப் போலவே ''//

ஆம்! எல்லா கொடையும் ஒரு மழையில் நனையும்... நனைத்த மழையை உலர்த்த ஒரு கோடை வரும்... பின்னே!

அருமை! :)

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

//''எல்லா கோடையின்
இறுதியும் ஒரு மழையுடனே முடிகிறது..
எல்லாக் கோடையும் ஒரு மழைக்காக காத்திருக்கிறது. நமைப் போலவே ''//

ஆம்! எல்லா கொடையும் ஒரு மழையில் நனையும்... நனைத்த மழையை உலர்த்த ஒரு கோடை வரும்... பின்னே!

அருமை! :)

Aruna said...

மழைக்காகக் காத்திருப்பு எப்போதும் இனிமையானது....ம்ம்ம் மற்றும் ஒரு மழையில்....
அன்புடன் அருணா

Jerry Eshananda said...

உண்மை.