சுவரில் இருந்த கோட்டுச்சித்திரமொன்று
நேற்றைய பின்னிரவில்
தரையிறங்கி வந்திருந்தது.
முகம் மூடிய போர்வை தாண்டி
காதோரமாய் அதன் மூச்சுக்காற்று
எனை எழுப்பியது.
இரவின் கருமையில்
பளபளத்த கண்கள்
அது கடந்து வந்த
பாதையின் வெளிச்சப்புள்ளிகளை
தொட்டுணர்த்தியது.
இருவரும் மெல்ல கைகோர்த்து
கவிதை வாசிக்கத் துவங்கினோம்
வெளியில் பெய்து கொண்டிருந்த
சாரலில்
மடி சாய்ந்து உறங்க வேண்டுமாய்
கண் பார்த்து கேட்டது அச்சித்திரம்.
முகம் நனைய நானும்
தன் கோடுகள் மறைய சித்திரமும்
உறங்கத் துவங்கினோம்
உறக்கத்தின் முடிவில்
கனவு கலைந்து எழுந்து பார்த்தேன்
சித்திரத்தை சுவற்றில் காணவில்லை.
Wednesday, August 20, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
இத்தனை நாட்கள் அனைத்தும் கூட்டி தள்ளப்பட வேண்டியதுதான் இந்த கவிதையை காணும் வரை..
Post a Comment