வெள்ளைப் பனி பெய்து முடித்திருந்த
ஒரு மாலை நேரத்தில்
மிக இயல்பாக நமது சந்திப்பு
நிகழ்ந்து முடிந்திருந்தது.
வேகமாக நகர்ந்துகொண்டிருந்த ஒரு நத்தையின்
பின்னால் ஓடிக்கொண்டிருந்தேன் நான்.
ஓரமாய் அமர்ந்திருந்த ஒரு முயலின்
முதுகில் சற்றே சாய்ந்தவாறு
அமர்ந்திருந்தாய் நீ
முகத்தில் அடித்த சாரலின்
உந்துதலில் நிமிர்ந்து பார்த்தேன்
மின்னும் புன்னகையோடு உன் கண்கள்
என்னை தொடர்ந்து கொண்டிருந்தது.
நேற்றைய நாளின் விலாசம் கேட்டாய்
நாளையின் வீடு மட்டுமே தெரிந்திருந்ததனால்
மெளனத்தை சுமந்தேன்
தெருவில் அடர்ந்த இருட்டு வெகுவேகமாய்
பரவிக்கொண்டிருந்தது.
மரத்தின் நிழலும் அதனுள் பதுங்கிக்கொண்டது.
எனை நோக்கி கை நீட்டினாய்
இரவு மிருகம் ஒன்று எனை
இறுக்கமாய் போர்த்திக்கொண்டது
ஒவ்வொரு நாளும் இந்த சலனம்
நீ மரித்துப்போன நாள் முதலாய்
Friday, February 29, 2008
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
minnum punnagaiyodu...
Eravin Irrukam,
Soagathil Sorgam,
Minnugiradu un Arpudavarigalil.
Vaazthugal.
Miga Arumaiyaga Ullathu.
அருமை
தொடரட்டும் தோழி!
கைகள் நடுங்குகிறது வாழ்த்துவதற்கு வார்த்தைகளை தேடி..
Post a Comment