Friday, February 22, 2008

நேற்றைப் போலவே...

ஒவ்வொரு நாளும் நேற்றைப்போலவே விடிகிறது

பக்கத்து வீட்டு குழந்தையின் அழுகை
எதிர் வீட்டு கணவன் மனைவி சண்டை
தெருவில் காய்கறிக்காரனின் சத்தம்
விரையும் பால்காரனின் மணியோசை

எல்லாமும் நேற்றைப்போலவே இருக்கிறது

ஒவ்வொரு நாளும் உனக்காக நான்
இட்ட பொட்டு
க‌ட்டிய‌ புட‌வை
வைத்த‌ பூ
சேமித்த‌ வார்த்தைக‌ள்
ர‌சித்த‌ இசை
குவிந்த‌ காம‌ம்
எல்லாமும்

நேற்றைப்போல‌வே க‌வ‌னிக்க‌ப்ப‌டாம‌ல் இருக்கிற‌து
தின‌மும் மாலை வ‌ருகிறாய்
‍ ஒரு மாலை நீ சூட‌ காத்திருப்ப‌து தெரியாம‌ல்
சமைத்ததை உண்கிறாய்
கொதிக்கும் மூச்சின் வெப்ப‌ம் உணராம‌ல்
தொலைக்காட்சி ர‌சிக்கிறாய்
என் வ‌ளைவுக‌ளின் தீரம் பாராம‌ல்
இர‌வு வ‌ண‌க்கம் சொல்லி வேக‌மாய் உற‌ங்க‌ச் செல்கிறாய்
இர‌வின் அர்த்த‌ம் புரியாம‌ல்

இன்றைய‌ இர‌வும் நாளைக்காகவே முடிந்த‌து

சாத்திய ஜன்னல் திறக்கப்படாமலே இருக்கிறது
நேற்றைப் போலவே...

அது திறக்கப்பட காத்திருக்கிறது
நாளை இரவுக்காக மறுபடியும்...

நேற்றைப் போலவே...

4 comments:

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

பணம் சேமிக்கும் அவசரத்தில்
காதலை சேமிக்க மறக்கும்
மரத்துப்போன மனிதர்கள்...

நில்லாமல் சுழலும் வாழ்க்கையில்
இயற்கை நமக்களிக்கும் நிழலே
இரவு...

இந்த இரவு
உறக்கத்திற்கானது மட்டுமல்ல
உறவுகளின் இறுக்கத்திற்காகவும் கூட...

இது புரியாத வாழ்க்கையில் தான் பெரும்பாலும் குழப்பங்கள்... பிரிவுகள்...

நிறைய சிந்திக்க வைக்கும் கவிதை.. அருமை!!!

Ganes Kumar said...

Anuradha, You said you are a very simple girl. But, I don't think so. A simple girl, can't think like you.

Intha kavithai, unnoda matra kavithaikalai vida padithu purinthu kolvatharku easy-aga irunthathu. Aanaal yosikavum vaithathu.

S.P.Karthikeyan said...

I am not very good at words. But I would like to praise this poem in two simple words "Mindblowingly Realistic".

This poet has a great talent in selecting the appropriate words and these words apart from conveying the meaning it also shows its power.

The para "Netrai pollave kavanikkapadamal", the words like "Samaippadhai ungirai....Moochin Veppam Unaramal, Urango Selgirai, Iravin Neelam Puriyamal" every word tells a untold story which can be perceived in many different ways. Anu, I dont know what did u perceive while using these words but onething is for sure, You are Amazing. Pen Kaviye Vaazhga

Jerry Eshananda said...

i would like to endorse above three comments.