Tuesday, March 23, 2010
சிவமெரிக்கும் நான்
வடுவாய் நிற்கிறது
வாழ்ந்து கழிந்த வாழ்க்கை
தொடரத் துடிக்கும் கால்களை
வெட்டிப் போடுகிறது
நிதர்சனம்
எனை மறைத்து தான் மட்டும்
நான் போல் போகிறது
என் நிழல்
வலியுடனே வாழ்கிறேன்
சுகமாய் இருப்பதாய்ச்
சொல்லிக் கொள்கிறேன்
எனக்கு நானே
எனை நானே கொல்கிறேன்
அனைத்தும் மறந்து விட்டதாய்
அல்லது மறைந்துவிட்டதாய்
மண் குழைத்து எனைச் சுற்றி
சுவர் எழுப்புகிறேன்
கால்கள் மறைத்து மேல் எழும்புகிறது
செங்கற்கள் கொண்டு கட்டிடம்
தனைக்கட்டிக் கொள்கிறது
சுவர் எங்கும் நீ விசிறி விட்டுப் போன
இரத்தத் தெறிப்புகள்
என் மேகம் எங்கும் மின்னல் தெறித்து
என் உடல் எரிக்கிறது
என் காலின் கீழே
சிவமெரித்துக் கிடத்தி இருக்கிறேன்
நானே வானாய்
மாறிப் போன நிமிடத்தில்
எனக்கு ஆயிரம் கைகள் முளைத்தது
ஒவ்வொரு விரலிலும்
ஆயிரம் சிசுக்கள்
உதிரம் குடித்தபடி
நண்பகலில் மிளகாய் அரைத்து
உள்ளங்காலில் பூசி
ஒப்பனைகள் தொடர்கிறேன்
காயங்கள் காயும் முன்
நெருப்பெடுத்து அப்பிக் கொள்கிறேன்
கட்டிடம் முடியும் தருணம்
நானே கல்லாய் மாறிப் போகிறேன்
மனிதம் தேடி தவம் தொடர்கிறது
Subscribe to:
Post Comments (Atom)
22 comments:
நல்லாயிருக்கு
//என் மேகம் எங்கும் மின்னல் தெறித்து
என் உடல் எரிக்கிறது
என் காலின் கீழே
சிவமெரித்துக் கிடத்தி இருக்கிறேன்
நானே வானாய்
மாறிப் போன நிமிடத்தில்
எனக்கு ஆயிரம் கைகள் முளைத்தது
ஒவ்வொரு விரலிலும்
ஆயிரம் சிசுக்கள்
உதிரம் குடித்தபடி
நண்பகலில் மிளகாய் அரைத்து
உள்ளங்காலில் பூசி
ஒப்பனைகள் தொடர்கிறேன்
காயங்கள் காயும் முன்
நெருப்பெடுத்து அப்பிக் கொள்கிறேன்//
சின்ன வயதிலிருந்து நிறைய துர்க்கை கதைகள் கேட்டதுண்டு,
ஆனால் உங்கள் கவிதை படித்தவுடன்
ஒருவேளை துர்க்கை இப்படி தான் தோன்றி இருப்பாளோ
என்றே என்ன தோன்றுகிறது..
ஏனெனில் இந்த கவிதை வேறெதையும் காட்டிலும்
துர்கையின் தோற்றமாகவே நான் பார்க்கிறேன்..
துர்கையை போலவே துடியான ருத்ரமான கவிதை.. வாழ்த்துக்கள்
சூப்பர்
ஆத்தா நான் வரலை இந்த விளையாட்டுக்கு......
ஏற்கனவே வெய்யக்காலம், சும்மாவே எரியுது.... இதுல உங்க கவிதை வெற அங்கங்க பத்திக்கிட்டு எரியுது...
ஊப்ப்ப்ப்ஸ்
Thanks Rajapriyan, Annamalaiyan
Rajasekar,
உங்களது சிறு வயது நினைவுகளை எனது படைப்பு ஞாபகப் படுத்தியது எனக்கும் மகிழ்ச்சியே. உங்களது விரிவான கருத்துக்கு நன்றி
என்ன முரளி இதுக்கேவா, உங்க கிட்டே இன்னும் எதிர்பார்க்கிறேன். :) விளையாட்டு தோழனா இருந்துட்டு இப்டி பேசறது தப்பு. நீங்க குடுத்து பப்ளிசிட்டி-naala வந்த விளைவு இது அனுபவிங்க
நல்லா இருக்குங்க
ருத்ர சம்ஹாரம்
:)
எனை மறைத்து தான் மட்டும்
நான் போல் போகிறது
என் நிழல்
கிளாஸ்
வலிக்கிறது. தேடல் என்று முடியும் .அல்லது முடியாமல் கொல்லும்?
நன்றாக இருக்கிறது
//காயங்கள் காயும் முன்
நெருப்பெடுத்து அப்பிக் கொள்கிறேன்//
என்றதும், ஆங்காரமும், ஓங்காரமும், கோபமுமாய் வெறி கொண்டு வெளிவருகிறது வார்த்தைகள்.
கேபிள் சங்கர்
//கட்டிடம் முடியும் தருணம்
நானே கல்லாய் மாறிப் போகிறேன்
மனிதம் தேடி தவம் தொடர்கிறது //
வார்த்தைகள் முகத்தில் அறைகின்றன...
கவிதை (புனைவு) மிக அருமையாக இருந்தாலும், இந்த வலிகள் யாருக்கும் வரக் கூடாது என்றே மனம் விரும்புகிறது!!!
வாழ்த்துக்கள்...
Interesting perspective
Thanks Nesamithran, Sankar, Padma, Thigazh, Naresh & Kannan. Your feedback helps me to write more. Keep visiting my blog.
நல்லா எழுதி இருக்கீங்க.
Thanks Sushi
உங்களுடன் ஒரு விருதை பகிர்ந்து கொள்கிறேன் வந்து பெற்றுகொள்ளவும்
நல்லாயிருக்கு தோழி!
//மனிதம் தேடி தவம் தொடர்கிறது//
வார்த்தைகள் வசப்படுகிறது உங்கள் கைகளில். வாழ்த்துக்கள்
வரிகள் ரசித்து படிக்கும்படியாக இருக்குது.
வரிகள் ரசித்து படிக்கும்படியாக இருக்குது.
கவிதையின் ஆழம் நிலைகுலைய செய்கின்றது..
Post a Comment