Tuesday, March 23, 2010

மறுபடி ஒரு பயணம்















நிகழ் காலங்கள் நிஜம்
போலத் திரிகின்றன
கடந்து வந்தவை காணாமல்
போய் விட்டதாய்
ஒரு உணர்வு

இன்றிருப்பது மட்டுமே இன்றாகிப் போகிறது

ஏதோ ஒரு காட்டுக்குள்
கட்டவிழ்ந்து கிடக்கிறேன்
பயணங்களின் முடிவு தேடி
நடந்து கொண்டே இருக்கிறது நேரம்

உடன் நடக்கும் பாதச் சுவடு
மறந்து பாதை மாறி நடக்கிறேன்
எங்கோ சிதறும் ஒரு துளி நீரின்
சத்தத்துக்காக

ஒவ்வொரு நாளும் புதிதாய்ப்
பிறக்கிறேன்
மறுபடி ஒரு பயணத்துக்காக

நீர்த்துப் போன வாழ்வில்
சாரல் அடித்து
வெடித்துத் திறக்கிறது
என் பாலை

வெளியெங்கும் விரவிக் கிடக்கிறது
எப்போதோ சிந்திப் போன
புணர்ச்சியின் மிச்சங்கள்

அணைத்துப் போன தடங்கள்
தடுமாற்றத்துடன்
நிகழ்ந்ததைச் சொல்கிறது
என் இரவுக் கதைகளில்

தொடங்கும் இடம் தேடி
அலைகிறது மறந்து போன
காதலின் எச்சங்களை
மனம்

ஏன் வந்ததென்று தெரியாமல்
வந்து விட்டு போகிறது
ஒவ்வொரு இரவுகளிலும்
நேற்றின் ஆழ் முத்தங்கள்

நீளும் பயணம்
நீண்டு கொண்டே இருக்கிறது
மேலும் மேலும்
இன்னும் இன்னும்

மறுபடி ஒரு பயணத்துக்காய்
நான்

19 comments:

ராஜ சேகர் said...

சிறிய இடைவெளிக்கு பின் வந்திருக்கும் உங்கள் கவிதை,
உங்களது வழக்கம் மாறாத பாணியில்..
எனினும் அழகான கவிதை.. மிக்க மகிழ்ச்சி

//ஏன் வந்ததென்று தெரியாமல்
வந்து விட்டு போகிறது
ஒவ்வொரு இரவுகளிலும்
நேற்றின் ஆழ் முத்தங்கள்//

நினைவுகள் தரும் துயரத்தை அருமையாக
வெளிபடுத்துகிறது உங்கள் வார்த்தைகள்

இராஜ ப்ரியன் said...

//ஏன் வந்ததென்று தெரியாமல்
வந்து விட்டு போகிறது
ஒவ்வொரு இரவுகளிலும்
நேற்றின் ஆழ் முத்தங்கள்//
அருமை

அன்பேசிவம் said...

இன்றிருப்பது மட்டுமே இன்றாகிப் போகிறது.....

தொடங்கும் இடம் தேடி
அலைகிறது மறந்து போன
காதலின் எச்சங்களை
மனம்..........

ஏன் வந்ததென்று தெரியாமல்
வந்து விட்டு போகிறது
ஒவ்வொரு இரவுகளிலும்
நேற்றின் ஆழ் முத்தங்கள்.....

ம்ம். அனு, இந்த வரிகளில் நிறைய விஷயமிருக்கிறது

நேசமித்ரன் said...

அடர்த்தியான உணர்வுகளை மிக அழகாக வெளிப்படுத்தி இருக்கும் விதம் கவிதைக்கு சிறப்பு

shortfilmindia.com said...

//உங்களது வழக்கம் மாறாத பாணியில்..
எனினும் அழகான கவிதை.. மிக்க மகிழ்ச்சி
///

டிட்டோ
கேபிள் சங்கர்

தோழி said...

Thanks Rajasekar, Rajapriyan, Murli, Annamalaiyan, nesamithran & Cable

Jerry Eshananda said...

வாசித்து கொண்டே இருக்கலாம் போல தோணுகிறது,பிடித்த இசையை கேட்பது போல...[.என்ன ....கவிதை ...பிறந்த நாள் எபெக்டா.?..]

கனிமொழி said...

yepdi than ipdi yezhutharingalo anu...

Ovvoru murai unga post padichittu, comment podamalaiye pona natgal than miga athigam...

yetho onnu vanthu ottikum unga kavithaiyai padicha apram...

Hats off to your poems...

Ana romba valikkuthunga anu...

தோழி said...

நன்றி ஜெரி :)

தோழி said...

கனிமொழி, உங்க கமெண்ட்ஸ்கு ரொம்ப நன்றி. உங்க ப்ளாக் இப்போதான் படிச்சேன். ரொம்ப அழகா இருக்கு உங்க முதல் ஓவியம். என்னோட கருத்துக்கள் அதுல போடறேன்.

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு அனு.

அகநாழிகை said...

கவிதை அருமை

Kannan K said...

nalla irukku...

தோழி said...

Nandrigal Pala - Pa.Raa :)

தோழி said...

Thanks Aganaazhigai & Kannan

கனிமொழி said...

mmm..... Thank you anu...

Waiting for your comment... :-)

குட்டிப்பையா|Kutipaiya said...

gud one da...
niniaviugalin payanam miga azhagai.. in ur style :)

தோழி said...

Thanks Seetha

யாநிலாவின் தந்தை said...

நல்ல கவிதை...